பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 இரும்பானால் அரசனிடம் இருந்ததைவிட அரசியிடம் மக்களுக்கு ஆத்திரம் அதிகம். எனவே, வெட்டுப் பாறைக்கு அழைத்துச் சென்றபோது, கைகளைப் பின்புறமாகக் கட்டி, அனைவரை யும் ஏற்றிச் செல்லும் வண்டியில்தான் அழைத்துச் சென் றனர். வழிநெடுக மக்கள்--குறிப்பாகப் பெண்கள் நின்று கேலி செய்தனர் - - கேவலப்படுத்தினர். அக்டோபர் 15! அரசியும் வெட்டுப் பாறையில் வீழ்த்துபட்டாள். 'வாழ்க, குடியரசு' என்று மக்கள் முழக்கமிட்டனர். இரத்தவெறி பிடித்தல்லவா அலைந்திருக்கிறார்கள்! துளியும் ஈவு இரக்கம், மனிதாபிமானமற்றல்லவா, படு கொலைகள் புரிந்திருக்கிறார்கள். சமத்துவம், சகோதரத் துவம், விடுதலை என்றெல்லாம், சுவை தரும் பேச்சு பேசி னரே தவிர, அவர்களின் கரங்களை இரத்தத்திலல்லவா தோய்த்து எடுத்தனர்- என்றுதான் எவருக்கும் கேட்கத் தோன்றும். புனிதமான கொள்கைகளுக்காக என்று கூறினாலும், படுகொலை படுகொலைதான்! முறையைத் தள்ளுங்கள், முடிவைக் கவனியுங்கள் என்று கூறுவது சமாதானமே தவிர, சன்மார்க்கத்துக்கும் சரி, அறிவுடமைக்கும் சரி, சான்றாகாது. புரட்சியின் பயங்கரம், அளவில் அதிகம்; மறுப்பதற் கில்லை. கொடுமைகள், கேட்கக் கூசக்கூடியவை; இல்லை என்று வாதிடுவது வீண். ஆனால், எண்ணிப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான வேறோர் பிரச்சினை இருக்கிறது. அன்பு, அறம், ஈவு, இரக்கம், பற்று, பாசம், பயம், பக்தி, தயவு, தாட்சணியம் - இவைபோன்ற குணங்கள் கொண்டவர் கள், எப்படி இரத்த வெறிபிடித்து அலையும் நிலை அடைந் தனர்? ஆட்டுக்குட்டிகள் போலக் கிடந்தார்களே, இவர்கள் எப்படி ஓநாய்களாக மாறினர்? அந்த மாறுதலுக்குக் கார ணம் என்ன?