பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம் பார்க்கப் பச்சைப் பசேலென்று இருக்கிறது, மலரும் கனியும் குலுங்குகிறது, சுவையும் பயனும் அளிக்கிறது, மரம். அதைக் காயவிட்டு, விறகு ஆக்கிவிட்டால், கவர்ச்சி அடியோடு போய்விடுகிறது. பிறகு நெருப்பெரிக்க மட்டுமே பயன்படுகிறது! நெருப்பில் விறகைப் போடும் வரையில் பயம் இல்லை. விறகு நெருப்பாகிவிட்டாலோ, தொடக்கூட அச்சம்; பட்டால் தொல்லை; சுட்டால் புண் ஏற்பட்டுவிடு கிறது. 82 பச்சையாகத்தான் இருந்தது. ஒடித்து நாசமாக்கி, உலரவிட்டு விறகாக்கிப் பிறகு நெருப்பாக்கி விட்டு, தீ சுடு கிறதே. பெரு நெருப்புச் சூழ்ந்து கொண்டதே என்று கூறு வதில் என்ன பயன்? பிரான்சு மக்கள் இதயம், எல்லாப் பண்புகளும் பூத்துக் குலுங்கும் இடமாகத்தான் இருந்தது--அச்கிரம அரசுகள் அமைத்துக் கொண்டவர்கள், அந்த இதயத்திலிருந்த பண்பு கள் வற்றிப் போகும் அளவுக்கு, கொடுமை புரிந்தனர். விற காகிவிட்டது, பச்சைக் கொடி! இரும்பாகிவிட்டது, மக்கள் இதயம். மலர் குலுங்கிற்று கொடியாகக் கிளையாக இருந்த போது; நெருப்பாகிவிட்டது, விறகு ஆக்கப்பட்டதால் 'ராஜ பக்தி'- 'தெய்வபக்தி'- எல்லாம் ததும்பும் மனம்தான் இருந்தது. கொடுமைப்படுத்திக் கொடுமைப்படுத்திப் பழி தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சி தவிர வேறு எதுவும் இருக்க முடியாத நிலைக்கு மாற்றிவிட்டனம் மக்கள் இதயத்தை, மன்னர்களாக வந்த மமதையாளர்கள். இதயம் கொதித்தபோது, ஏளனம் செய்தனர். வேத னையை வெளியிட்டபோது கேலி பேசினர். இரத்தம் கேட்ட போதுதான் ஆதிக்கக் கூட்டம் அச்சப்பட்டது. பிறகு கேட்க லாயிற்று, "ஈவு இரக்கம் துளியும் இல்லையா?" என்று. "சீமானே! உன் தந்தை வயதிருக்கும் எனக்கு! உங்கள் குடும்பத்துக்காகவே உழைத்து உழைத்து, சருகு ஆகிப் போனேன்! என்னைச் செருப்புக் காலால் உதைத்தாய், என் மனைவி எதிரில்! நினைவிருக்கிறதா? அப்போது பண்பு