பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால் இருந்ததா உனக்கு? அதைக் கண்டு சிரித்தாள் உன் சிங்கார மகள்! பண்பா அது? இப்போது எம்மிடம் பண்பு இல்லையே என்று கேட்கிறாய், உமது இல்லந்தோறும் பண்புப் பயிர் வளர்த்து வைத்தவர்போல!! என்று கேட்பான், புரட்சியால் "பொல்லாதவன்' ஆகிவிட்டவன். ஆனால் சீமான் இல்லை எதிரில்! பலர் இறந்தனர். மற்றும் பலர் மறைந்தனர்! கேட்க முடியவில்லை. 83 உழைப்பவனைச் சுரண்டினர்; அதற்குப் பெயர் வரி விதிக்கும் முறை என்றனர். வயல்களை அழிக்கிறோம் என்ற னர்; காரணம் கேட்டால் வேட்டைக் கலை வளர்க்கிறோம் என்றனர். அகப்பட்டவைகளை வாளுக்கு இரையாக்கினர். 'ஏன் ஐயா!' என்றால், 'வாளின் கூர்மை எப்படி இருக்கிறது என்று பார்த்தோம்' என்றனர். இது பிரபுக்கள், அரச குடும் பத்தினர் காட்டிய பண்பு! மறுக்க இயலுமா? "என்ன செய்தான் உன்னை." "எப்படிப் பிரபுவே! அதைச் சொல்வேன்." 'சொல்லடி கள்ளி! என்ன செய்தான்? என்னைக் கெடுத்தான். "பத்தினித் தங்கம் இவள்! போக்கிரிப் பெண்ணே! நீ என்ன பரிசுத்தமானவளோ? கெடுத்தானாம், கெடுத்து... இளித்துக் கொண்டு எதிரே வந்திருப்பாய், என்னமோ போலிருந்திருக்கும். சரி! சரி! எங்கே நடந்தது...? "எது...? உம்! உற்சவம்..." "மாதாகோயிலில் ... "பாதகி! மாதா கோயிலிலா? எப்படி உனக்கு அந்த இடத்தைப் பாழ்படுத்த மனம் துணிந்தது? 'ஐயையோ! நான் உண்மையாகவே உற்சவத்தைப் பற் றித்தானே கேட்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டேன். கர்த்தரே! மன்னித்துவிடு. என்னை அவர் குதிரைக் கொட்டி லில்..,"" குதிரை என்ன செய்து கொண்டிருந்தது...