பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இதயம் 'கொல்' என்ற சிரிப்பொலியல்லவா கிளம்பி நாச மாக்கப்பட்டு நங்கைக்கு வேதனையைத் தந்தது இவ்விதமான வழக்கு விசாரணையின் போது. அரசியைப் போய் துளியும் பண்பில்லாமல் ஊர் என்ன, பெயர் என்ன என்றா கேட்பது, மக்கள் அமைத்த விசார ணைக் கூடத்தில் என்று கேட்பர், கேட்கிறார்கள்; ஆனால் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நாட்களிலே, பிரபுக்கள் நடத்திய விசாரணைக் கூடங்களிலே நடந்தன பற்றிக் கேட் டனரா? இல்லை! பண்பு யாரால் எப்போது எந்த விதத்தில் அழிக்கப்பட்டது? மக்களா அழித்தனர்? சீமானின் தூக்கத்தைத் தவளைகள் சத்தமிட்டுக் கெடுக் குமாம். இரவெல்லாம் கண்விழித்து ஏழைகள் தவளைகளைப் பிடித்து அடிக்க வேண்டுமாமே! எத்தனை நேர்த்தியான பண்பு! "சீமானின் வயலிலே எலிகள் அழிவு உண்டாக்கும். அந்த எலிகள் உன் வயலிலே உள்ள வளைகளிலே இருந்துதான் வருகின்றன. ஆகவே, நஷ்டத்துக்கு நீதான் பொறுப்பு என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய அநியாயக்காரர்களை யார் அடக்க முன் வந்தார்கள்? 'இரத்தம் வேண்டும்!' என்று கேட்ட பிறகுதான் புழுவும் போரிடும் என்று புரிந்தது. குடித்துவிட்டுக் கூத்தாடுவது, அதற்குப் பெயர் கலை! ஆலயச் சொத்துக்களை அபகரித்துக்கொள்வது- அதற் குப் பெயர், அருளைப் பெற்று அளிக்கும் புனிதப்பணி. சூறையாடுவது- அதற்கு வீர விளையாட்டு என்று பெயரிடுவது. எச்சிற் பண்டங்களைப் பசிக் கொடுமையால் தாக்குண் டவர் எதிரே வீசுவது; அவர்கள் பாய்ந்தோடிச் சென்று எடுத் துத் தின்னப்போகும்போது வேட்டை நாய்களை அவிழ்த்து விட்டுக் கடிக்க வைத்து கை கொட்டிச் சிரிப்பது! சீமானே! உனக்கு இது பொழுது போக்காக இருந்ததே! இப்போது தத்துவப் பேராசிரியனாகி பண்பு பாழாகலாமா என்றா கேட்கிறாய் — என்று கேட்பான் புரட்சிவீரன். எதிரே வர, சீமானுக்குத்தான் நடுக்கம்.