பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால் பதினாறாம் லூயி, கொடுமைக்காரனல்ல; ஆனால் கொடுமைக்காரர்களை அடக்கும் திறனற்ற மன்னன். செயல் புரியச் சங்கடம்! சிந்திக்க அதைவிடச் சங்கடம்! 1க்கள் மனம் எரிமலையாகி இருந்த வேளையில் அரசனானான்; நிலைமையை அறிந்து கொள்ள முடியவில்லை. செய்ய வேண்டிய வேலை முடிதாங்கிக் கொள்வது, அடி வருடிகளை ஆனந்தப்படுத்துவது, ஆட்சி நடத்த அமைச்சர் களை நியமிப்பது, அவர்கள் 'கைவிரித்தால்' வேறு ஆட் களை அமர்த்துவது—இவ்வளவுதான் என்று எண்ணிக் கிடந் தான். மன்னன்" 85 அவனை மணக்க வந்த மங்கைக்கோ, ஆடம்பரம் என்றால் கொள்ளை ஆசை! நேரம் இடம் கூடப் பார்க்கத் தேவையில்லை என்ற அளவுக்கு ஆடலிலும் பாடலிலும் விருப்பம். விருந்துகள் நடத்துவர். பணம் விரயமாவது பற் றிய கவலையற்று விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கு வாள். தேவைக்காக அல்ல; பிறர் பார்த்து ஆச்சரியப்பட! சூதாட்டச் சாலைகளிலே அரசியைப் பார்க்கலாம்! வெறி யாட்டங்களிலே அவள் நடுநாயகமாவாள். இவ்வளவு வீண் செலவுக்கும் பணம் தரும் பாட்டாளி கள் பஞ்சைகளாகிப் பராரிகளாகிக் கிடக்கின்றனர் என்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை; நேரமும் இல்லை; நினை வும் எழவில்லை. "ரொட்டி கிடைக்காவிட்டால் என்னவாம்! 'கேக்' சாப்பிடட்டுமே!' என்று சொன்ன காலமல்லவா அது! 'பசித்தால், புல் தின்னட்டுமே! வலிவு கிடைக்கும், மாடுகளுக்குக் கிடைப்பது போல!' என்று கொக்கரித்த அமுல் நிரம்பிய நாட்களல்லவா. பண்பு வளர்க்கும் பல்கலைக் கழகங்களா அமைத்தனர்? பஞ்சமாபாதகம் நெளியும் படு குழிகளைப் பளிங்குமாடங்களில் அமைத்துக்கொண்டனர். காற்றில் சிக்கிய மலரின் இதழும், கனவான் விருந்திலே கலந்து கொண்ட காரிகையரின் இதழும், பட்டபாடு கொஞ் சமா - அதற்குப் பெயர்தான் பண்பா?