பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம் உழைத்து அலுத்த மக்கள் உணவின்றி வாட, உலுத்தர் கூட்டம் எத்துணை அளவு பணத்தைப் பாழாக்குவது? கோடி கோடியாக! பரிவாரங்களின் செலவு கொஞ்சமா! பாழாக் கப்படும் பண்டங்கள் எத்துணை நத்திப் பிழைப்போர் கொத் தித் தின்று ஏப்பம் விட்டபடி இருந்தனர் பெரும்பொருளை, காமவல்லிகள் கண்காட்டுவர்; கட்டித் தங்கத்தை அவர்கள் காலடியில் கொட்டுவர்! இடையொன்று அசையும்; சில இலட் சங்கள் அவள் இரும்புப் பெட்டியில் போய்ச் சேரும். "உன் கண்ணெ:ளி, வைரத்துக்கு ஏது?'" என்பான் அரச குடும்பத்து இளைஞன்! 86 . "கொடுத்துப் பார்த்தால்தானே தெரியும்" என் பாள் கைகாரி! வைரமாலை அவள் கழுத்துக்குப் போய்ச் சேரும். அவள் யார்? என்ற கேள்வி கிளம்பியதும் இவ்வளவு பணம், இந்த இடம், இந்த நேரம், என்று பதிலளிக்க ஆட்கள் அரண்மனையில் உண்டு. சேடிக்குப் பணம் கொடுத்துச் சீமாட்டியின் துணை கொண்டு அரண்மனைக்குள் நுழைவது! அங்கு சென்றதும், அழகும் அப்பாவித்தனமும் ஒருங்கே கொண்ட அரச குடும்பத் தவளைத் தேடிப் பிடிப்பது, தேனொழுகப் பேசுவது, தேவ லோகம் போக வேண்டும் என்றோர் ஆசை, உன்னைக் காணும்வரை இருந்தது என்று கூறுவது; அவள் "போதுமே கேலி" என்பாள். "அதோ அந்த மலர்ப்புதர்" என்பான் இவன்; ஐயையோ! அது அந்தச் சிமாட்டியின் சொந்தமா யிற்றே" என்பாள் இவள். பிறகு இடத்துக்கா பஞ்சம்! இப்படிப்பட்ட கோலாகலத்தில் மூழ்கி, நாட்டுச் செல்வத்தை ஒரு சிறுகூட்டம் பாழாக்கிக் கொண்டிருந்தது. பார்த்துப் பார்த்துப் பதைத்த மக்கள், பண்பு ஆராய்ச்சியா நடத்திக் கொண்டிருப்பர். " ஏழையின் கண்ணீரைக் கண்டு, பெருமூச்சைக் கேட்டு, காய்ந்த வயலைப் பார்த்து, தேய்ந்து கிடக்கும் உடலைப் பார்த்து, கண்களிலே, "கடுமை குடி ஏறுவது பார்த்து, ஆட்சி நடத்தினோர் பாடம் பெற்றிருந்தால், திருத்தம் ஏற்பட்டிருக்கும்; தீ பரவாதிருந்திருக்கும்.