பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 இரும்பானால் ஒரு சமயம், பதினைந்தாம் லூயி அலங்கார வண்டியில் போய்க் கொண்டிருக்கிறான். உடன் வந்த சீமானை மன்னன் 'இந்த வண்டி என்ன விலை போகும்? சொல்லு பார்ப்போம்' என்று கேட்டான்? சீமான், '8000 லிவரி (பிரான்சு நாண யம்) இருக்கும்' என்றான். மன்னன் சிரித்துவிட்டு, 'இதற்கு 30,000 லிவரி கொடுக்கப்பட்டது. கொள்ளையே அடிக்கி றார்கள். என்னைச் சூழ இருப்பவர்கள்' என்றான். வழக்கு மன்றத்திலே, கோழி திருடியதாகக் கூண்டிலேற் றப்பட்ட ஏழைக்கு, நியாயம், தர்மம் இரண்டையும் மதிக் காத கயவனுக்கு எட்டாண்டு தரப்பட்டது என்று நீதிபதி கூறுகிறார்! மன்னனைச் சுற்றிக் கொள்ளைக்காரர்கள், பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு நிற்கிறார்கள்! பிரபுக்களின் கோலாகல வாழ்வைக் கண்டிக்கும் துணிவு, மதத்தவைவர்களுக்கு இல்லை-ஏன்? அவர்களே பிரபு குடும் பத்தினர்! உடையிலே மாறுபாடு இருந்தது; நடவடிக்கையில் அல்ல! ஜெபமாலை, கூர்வாள், செங்கோல் --- மூன்றுமே ஏழைக்கு வாழ்வு அளிக்கவில்லை. எனவே அவனுக்கு எதிலும் நம்பிக்கை நசிந்துவிட்டது. மாண்டவர் போக மீதமிருந்தவர்களின் மனப்போக்கு மாறிக்கொண்டு வந்தது. பணிவு குறைந்தது; துணிவு துளிர்த் தது! கண்ணீர்விட்டுக் கிடந்த மக்கள், சீமான்களைக் கண் டால், காரித் துப்பலாயினர். கசையடியால் மாண்டிருப்பான் தகப்பன், அவன் மகனோ, கல்லெடுத்து வீசுவான் சீமான் மீது. எரிச்சல், எதிர்ப்பு உணர்ச்சியை ஊட்டிற்று. இந்தக் குறியைக் கண்டு கொள்ளவில்லை, ஆட்சி நடத்தினோர்! 'இதுகள்’ எப்போதும் இதுபோலத்தான் கிடக்கும் என்று எண்ணினர்; ஏமாந்தனர்!'பசியைத் தாங்கிக் கொள்வார்கள்; பாபம் புரியமாட்டார்கள் பாமரர்' என்றார். மதகுரு. 'அந்தப் பைத்யக்கார எண்ணம் எங்களை விட்டுப் போயே விட்டது' என்றான், கொடுமைக்கு ஆளான ஏழை. கடல் கொந்தளிக்கத் தொடங்கிற்று. கலத்திலிருந்தோர் அந்த ஒலியை அறியவில்லை; வெறிக்கூச்சல் செவியில் சங்கீதமாக வீழ்ந்து கொண்டிருந்ததால்.