பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இதயம் மேரி அன்டாயினட், பிரான்சு நாட்டுக்கு அரசியாவ தையே அந்த நாட்டு மக்கள் வெறுத்தனர்-அவள் ஆஸ்ட் டிரிய நாடு என்பதால். வந்த மேரியும், மக்கள் மனதைக் கவர முயலவில்லை; வசீகரத்தைக் கண்டு புகழும் சீமாட்டிகளைத்தான் தேடிக் கொண்டாள். மன்னன் அத்துணை அட்டகாசம் ஆடம்பரம் தேடுவ தில்லை; அரசிக்கு அஃதன்றி மகிழ்ச்சி தரும் வேறு பொழுது போக்கு இல்லை. தரம் கெட்ட கொட்டகை செல் வாள்! தாறுமாறாக நடனமாடி மகிழ்வாள்! கோமாளி வேடம் பூண்டு நாடகமாடுவாள்! மக்கள் அருவருப்புக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ, அவ்வளவையும் சிரமப்பட்டுப் பொருள் செலவிட்டுச் செய்துவந்தாள். அரசி மேரியின் அணிமணிகள் உடை வகைகள் புதிது புதிதாக வடிவம், வண்ணம், மாறும். உடனே உல்லாச உலகு அந்த 'தரத்தை'ப் பின்பற்றும். தலையணியில் இறகுகளைச் செருகிக்கொள்ளும் வழக் கத்தை அரசி புகுத்தி இறகுகளின் விலையே ஏறிவிட்டதாம். இந்த அழகைத் தன் தாய் காணவேண்டுமென்று, படம் தயாரித்து அனுப்பினாளாம் அரசி. அவள் தாய் மெரயா, தெரிசா படத்தை திருப்பி அனுப்பிவிட்டு "நான் பிரான்சு நாட்டு அரசியின்படத்தை எதிர்பார்த்தேன். இந்தக் கடைசித் தரமான நாடகக்காரியின் படத்தை எதிர்பார்ப்பதே; இந்தக் கடைசித் தரமான நாடகக்காரியின் படத்தையல்ல" என்று கடிதமே அனுப்பினார்களாம். பிரான்சு நாட்டுச் செல்வவான்களுடன் லியான்சு நக ரப் பட்டிலே ஆடைகள் தயாரித்து அணிவது வாடிக்கை. பெரும் பொருள் போட்டுப் பலர் அந்தத் தொழிலை நடத்தி வந்தனர். பல ஆயிரக்கணக்கான நெசவாளர் பிழைத்து வந் தனர்; திடீரென்று அரசி, லயான்சு பட்டாடையை விட்டு விட்டு, பிரசல்ஸ் நகரில் தயாரிக்கப்பட்ட வெள்ளை வண்