பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால் ணத் துணியில் ஆடைகள் தயாரித்து அணியலானாள். அரசி அணியவே அனைவரும் அதனையே தேடினர்.லயான்சு நகரில் தொழில் கெட்டது. கெட்டது. அரசி ஏன் இப்படி எம்டைக் பிழைப்பு கெடுக்கிறாள் என்று கேட்டனர் தொழிலாளர். இது தெரியாதா? பிரசல்ஸ் நகர வெள்ளை ஆடை தயாரிக்கும் தொழிலால் இலாயம் அடை வது, அரசியின் அண்ணன்! அவனுக்கு இலயம் தேடத் தான் நமது வயிற்றில் மண் போடுகிறாள் வெகுண்ட மக்கள்! அவர்கள் கூறியதில் உண்மை இல்லாமற் என்றனர் போகவில்லை. 89 வெறுப்பு நிரம்ப ஏற்பட்டுவிட்ட நிலை. மக்களின் நிலையை எடுத்துக்கூறிடப் பலர் முன்வந்தனர். பகுத்தறிவு வால்டேர் மூலம் பரவிற்று. ரூசா அரசியல் தெளிவு அளித்து விட்டார்; உரிமைக்காக அஞ்சாது போரிட் டால், எத்தகைய ஆதிக்க அரசையும் வீழ்த்தலாம் என்பதை அமெரிக்கா நடத்திக் காட்டிய 'விடுதலைப் போர்' எடுத்துக் காட்டிவிட்டது. அமெரிக்கா சென்று திரும்பியவர்கள், 'கதை, கதை'யாகக் கண்டவைகளைக் கூறினர். முச்சந்திகளிலும், உணவுக் கடைகளிலும், வயலோரத்திலும், தொழிலிடங்களி லும், இதே பேச்சு! "ஆமாம். அமெரிக்கரின் வீரம் அப்படிப்பட்டது. நம்மைப்போலவா, குட்டக் குட்டக்குனிந்து கொடுப்பார்கள். அவர்கள் மனிதர்கள்! நாம் நடைப்பிணங்கள்!" என்று கூறு வான் ஒருவன் 'இரு, இரு : பொறு, பொறு' என்பான் இன் னொருவன். "எது வரையில்? நமது எலும்புகளை எடுத்து இசைக் கருவி அமைத்து நரம்புகளை அறுத்தெடுத்து அதிலே குளிரச் செய்யும் வரையில் பொறுத்திருக்க வேண்டுமா?" என்று குத்திக் கேட்பான் இன்னொருவன். 'என்னதான் செய்வது என்பான் வேறொருவன். 'சாகுமுன் கொடுமையை எதிர்ப்பது' என்பான் அமெரிக்கா சென்றுவந்தவன், 'வலிவு?'