பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இதயம்

என்று கேட்பான் இளைத்தவன். அவன் இதயத்தைக் காட்டி. 'இங்கு இருந்தால் போதும்' என்பான் அமெரிக்கக் காட்சி கண்டவன். அமெரிக்க விதைப் பண்ணையிலிருந்து புரட்சிக்கான தரமான லித்து கிடைத்தது.

      இதற்கிடையில் கவலையற்ற மன்னனையும் கலங்கச்செய்யும் விதமாகப் பொருளாதார நெருக்கடிகள் கிளம்பின.அமைச்சர்கள் மாறி மாறி அமர்த்தப்பட்டனர். நெக்கர் போன்றவர்கள் தமது நிபுணத்தனம் நாட்டைக்காத்திடும்என்று நம்பி உழைத்தனர். ஆனால் மூண்டுகிடந்தவைகளைக் களைந்திட முடியவில்லை. அமைச்சர்கள் மாறினர், அவதிகள் வளர்ந்தன; மக்களின் ஆர்ப்பரிப்புக் கிளம்பிற்று. தீர்க்கமுடியாத சிக்கலும், அடக்கிட முடியாத தொல்லையும்,

போக்கிட முடியாத நெருக்கடியும் ஏற்படும்போது மட்டுமே. ஸ்ட்டேட்ஸ் ஜெனரல் எனும் கூட்டு மன்றத்தைக் கூட்டுவதுவழக்கம். பிரான்சு மன்னர்கள் இதைக் கூட்டுவது என்றால் தயங்குவர்.

   கூட்டு மன்றம் என்பது, மக்களின் பிரதிநிதிகள், மதத்துறை உறுப்பினர், பிரபுக்கள் எனும் மூன்று பிரிவின

ரும் ஒன்றாகக் கூடி, நாட்டுக்கு வந்துற்ற கேடு போக்க வழிக்காண ஏற்பட்டஅமைப்பு

    படை பலமும், சட்டத்தின் துணையும் போதுமானதாக இல்லை; மக்களின் கூட்டுச் சக்தி திரட்டப்பட்டாலன்றநெருக்கடி தீராது என்பதை அறிவிக்கும் சம்பவம், கூட்டுமன்றம் கூட்டுவது.
  கூட்டு மன்றம் கூடினால் மன்னரின் ஆட்சி முறையைத்தகர்த்திடும் ஆற்றல் கிளம்பிவிடும் என்பது மன்னர்களுக்கு இருந்து வந்த அச்சம்.
   அச்சப்பட்டுப் பயன் இல்லை. எனவே பதினாறாம்

லூயி, கூட்டு மன்றம் கூட்டச் செய்தான். கூட்டு மன்றம் 1789ம் ஆண்டு மே 5ம் நாள் கூடிற்று.

 மக்கள் உழைத்துப் பொருள் தருவர், பிரபுக்கள் வீரத்தால் நாட்டுக்குப் பாதுகாப்புத் தருவர்; மதத் தலைவர்கள்ஜெபம் செய்து மக்கள் உய்வுக்கான அருள் தேடித் தருவர் என்பது தத்துவம்.

என்பது தத்துவம்.