பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால் நடைமுறை அடியோடு மாறிவிட்டது. மக்கள் தமது ‘பங்கினை' தேவைக்கு அதிகமாகவே செலுத்திக் கொண்டு வந்தனர்; பிரபுக்களும் பூஜாரிகளும், பெயர் கண்டு திருப் திப்படச் சொன்னார்கள். செயலோ சீர்கேடானவை. கூட்டுமன்றம் கூடுவதென்பது, பிரான்சு நாட்டிலே புனிதமான நிகழ்ச்சி. 91 மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏற்கனவே ஏற்பட்டு விட்டிருந்த விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் பன்மடங்கு வளர்ந்தது. பிரான்சு நாட்டிலே, உரிமை வேட்கையையும் ஊரா ளும் முறை பற்றிய தெளிவையும் ஊட்டப் பல கழகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவைகளில் மிக அதிகமான செல் வாக்குடன் விளங்கியது ஜாகபின்ஸ் என்பவர்களின் சங்கம். இந்தச் சங்கம் புரட்சிக் காலத்தில், மிகத் தீவிரமாகப் பணி யாற்றிற்று. இதிலே பயிற்சி பெற்றவர் பலர் மக்கள் மன்றத் தில் இடம் பெற்றனர்; ஆட்சிக் குழுவிலும் பணியாற்றினர். பேதமும் உட்பூசலும் ஏற்பட்டுப் பிறகு கலகலத்துப் போய் விட்டது என்றாலும், 'ஜாகபின் சங்கம்' மக்களிடையே உரி மைக் கனலை மூட்டி வெற்றி கண்டது. வர்சேல்ஸ் நகரில் மே 2-ம் நாள் கூட்டுமன்ற உறுப்பி னர்களை மன்னருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. நாலாம் நாள் கூட்டு மன்றத்தினர் 'அருளைப் பெற மாதாகோயில் சென்றனர். சயமான்யர்களே தேவாலயம் செல்லும் ஊர்வலத்தில் முன்வரிசையில் செல்ல வேண்டும் என்பது முறை. அதன்படி மக்களின் பிரதிநிதிகள் முன்னால் நடந்தனர். இரண்டாவது வரிசையில் ஆடம்பர உடையுடுத் திய பிரபுக்கள்; பிறகு மத அமைப்புக்களிலிருந்து வந்த வர்கள்; கடைசியில் மன்னன்! மக்கள் ஊர்வலத்தின் முன்வரிசையில் வந்த, தமது 'பிரதிநிதி'களைக் கண்டதும் களிப்புடன் ஆரவாரம் செய் தனர்; பிரபுக்களை ஏற இறங்கப் பார்த்தனர். வரவேற்க வில்லை; மதத்தலைவர்களை வெறுப்புடன் பார்த்தனர்; மன்னனை அருவருப்புடன் பார்த்தனர்.