பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இதயம் வரலாறு எவ்வாறு அமையப் போகிறது என்பதற்கான அறிஞறி அன்றே தெரிந்துவிட்டது. பணம் பெற வழிகூறும் கூட்டு மன்றம் என்று மன்ன னும் அவன் பரிவாரமும் எண்ணினர்; ஆட்சி முறை எப்படி. இருக்கவேண்டும்? மக்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக் கப்படவேண்டும் என்பதற்கான திட்டம் வகுத்துக்கொள்ள இதுதான் நல்ல வாய்ப்பு என்று விடுதலை விரும்பிகள் தீர் மானித்தனர். அரியணையில் அரசன் அமர்ந்தான்; குடும்பத்தினர் படி களில் அமர்ந்தனர்; வலப்புறம் மதத் தலைவர்கள், இடது புறம் பிரபுக்கள், கோடியில், சற்றுத் தாழ்வாக இருந்த இருக்கையில், மக்களின் சார்பிலே உறுப்பினரானோர் உட் கார்ந்தனர்; அன்றைய அரசியல் அமைப்பு அது; அதனை மாற்றத் துணிவும் வலிவும் கொண்டோர், 'முன்னிடம்' பிடிக்கவில்லை. பிடித்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது பார்வையால், பேச்சால் தெரியவந்தது மத அமைப்புக்களின் உறுப்பினர் எண்ணிக்கை 290. பிரபுக்கள் சார்பில் இடம் பெற்றோர் 266. மக்கள் சார்பில் வந்திருந்தோரின் எண்ணிக்கை 584! சமூகத்தின் படப்பிடிப்பு போல் இருந்தது, அந்தக் கணக்கு. அந்த 584 பேர்களில் 212 பேர் வழக்கறிஞர்கள், 16 1மருத்துவர், 162 பேர் வணி கர்கள் அல்லது சிறு பண்ணைகளின் சொந்தக்காரர்கள். மன்னர், கூட்டு மன்றத்தின் கடமை குறித்துச் சொற் பொழிவு நிகழ்த்தினார். அலுவலைக் கவனிக்கச் சொல்லி வீட்டுச் சென்றனர். அலுவலைக் கவனிக்க, மக்களின் உறுப்பினர் துடிக்கின் றனர். பிரபுக்களும் மதச்சார்பினரும் ஒத்துழைப்புத் தர வில்லை; முன்னவர் மறுக்கின்றனர், பின்னவர் தயங்குகின் றனர். 'நாமே அலுவலைக் கவனிப்போம்' என்று மக்களின் பிரதிநிதிகள் தீர்மானித்தனர்; மதச் சார்பினரும் ஒத்து ழைக்கத் தயாராயினர். இதை நாடு வரவேற்று மகிழ்ந்தது பால்தரும் கொழுத்த பசுவைக் கொண்டுவந்து கட்டி யிருக்கிறோம்; தொழுவத்தில் என்று ஆட்சி நடாத்தியோர்