பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 இரும்பானால் எண்ணிக் கொண்டனர்; நாட்கள் செல்லச் செல்ல, புலி உறுமுவது கேட்டது! தமது பிரதிநிதிகளை, மன்றத்திலும் வெளியிலும் கூடி மக்கள் உற்சாகமூட்டினர். "எமது அரசு ஏற்படப் போகிறது, எத்தர்களே! அறி மின்! தீர்த்துக் கட்டுமுன் திருந்துமின்! என்று மக்கள் கூட் டம் மமதையாளரை நோக்கி முழக்கமிட்ட வண்ணமிகுந் தது. எங்கும் எழுச்சி! உரிமைப் பேச்சு! எதிர்த்து நிற்கும் போக்கு! எவரும் எமக்கு நிகர் இல்லை என்ற நோக்கம்! புயல் கிளம்புகிறது என்பது புரியலாயிற்று. நெக்கர், மன்னன் தன் ஆட்சி முறையைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்திப் பார்த்தான். மற்ற வர்கள் மன்னனை உசுப்பிவிட்டனர். கூட்டு மன்றத்தை மன்னன் மீண்டும் சந்திப்பது என்று ஏற்பாடு செய்யப் பட்டது. சூன் மாதம் 22ம் நாள் அதற்காகக் குறிக்கப்பட் டது! ஆனால் 20ம் நாளே, 'அரசனின் ஏவலர்கள் மன்றம் நுழைந்து அரசன் வருகைக்கான அமைப்புச் செய்யவேண்டும்; அனைவரும் வெளியேறுக!' என்று உத்தரவிட்டனர். இதுபோன்ற அட்டகாசத்தை அழித்தொழிக்கத்தான் மக்களின் உறுப்பினர் கூடினர்; அவர்களிட மே ஆட்சியாள ரின் அம்புகள் வம்புக்கு நின்றன. எதிர்ப்பு எழுந்தது. இடையில் பந்தாட்ட அரங்கிலே கூடலாம் என்ற யோசனை கூறப்பட்டது. அங்கு சென்று, கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தலாயினர். கூட்டு மன்றத்தைக் கூட்டிவிட்டுக் கேவலப்படுத்துவது எத்தகைய அறிவீனம் என்பதை அரசன் உணரலில்லை. அர சனை அண்'டிப் பிழைத்துவந்த ஆள் விழுங்கிகள், அரசனுக் குத் தவறான பாதையைக் காட்டினர். 23ம் நாள், மன்னன் மன்றம் வந்தான். மக்களின் உறுப்பினர்களை, பக்கவாட்டத் தில் உள்ள கதவருகே நிறுத்திவைத்தனர், பிரபுக்கள் முன் வாயிற்படி வழியாகச் சென்று அமரும் வரையில்! பிறகு மக்கள் பிரதிநிதிகள் உள்ளே விடப்பட்டனர்! அவர்கள் உட்கார இடமே இல்லை. பிரபுக்களும், மதத்தலைவர்களும், இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர். தம்மைக் கேவலப்