பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம் இரும்பானால் படுத்துகிறார்கள் என்று அறிந்து, வேதனைப்பட்டனர்; இருப்பினும் பொறுத்துக் கொண்டனர். 84 மன்னன், அறிவுரை கூறலானான்; 'ஆகாத வழி செல்லாதீர்; அரசாள நானறிவேன்; உரிமை தேடி அலை யாதீர்! வரம்பு அறிந்து வாழுங்கள். மக்களின் நல்வாழ்வை நான் கவனித்துக் கொள்வேன். இனி, மூன்று பிரிவினரும் தனித்தனி இருந்து, அலுவலைக் கவனியுங்கள்." என்ற கருத்துப்பட மன்னன் பேசினான். மக்கள் உறுப்பினருக்குப் பெருத்த ஆச்சரியம். இத்துணை கண்டிப்பு மன்னனுக்கு எங்கிருந்து வந்தது என்ற ஆச்சரியம். மன்னனைப் பிரபுக் கள் ஏவிவிட்டிருக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது. மன்னன் புறப்பட்டான் அரண்மனைக்கு-பிரபுக்கள் புடைசூழ! மதத்தலைவர்களில் சிலர் சென்றனர்; சிலர் மக்க ளோடு கூடிக் கொண்டனர். மன்றத்தைத் தொடர்ந்து நடத்தலாயினர். மன்னனின் ஆணை பெற்ற அதிகாரி, 'அரசன் உம்மைக் கலைந்து போகச் சொல்லி உத்தரவிட்ட தைக் கேட்டீர்களல்லவ!ா?" என்று கேட்டான். "மன்னன் கருத்தைக் கூறினார். நாங்கள் மக்கள் கட்டளையை நிறை வேற்றக் கூடினோம். அந்த வேலையை வெற்றிகரமாக முடித்திடாமல் கலையமாட்டோம், என்பதைப் உன் எஜமானனுக்குச் சொல்'” என்று முழக்கமிட்டான், மிராபோ! விடுதலைப் போரின், முதல் முரசு ஒலித்துவிட் போய் அரண்மனையிலிருந்து உத்தரவுகள் கிளம்பின. மக்கள் மன்றம் அவைகளை ஏற்க மறுத்தது. ஆதிக்கம், ஆள்அடிமை கொள்ளும் முறை யாவும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்ற திட்டம் பற்றி மன்றம் பேசிற்று. நாடு மன்றத்தை வாழ்த் திற்று; மக்களின் போர்க்கோலம் கண்டு, பிரபுக்கள் பதுங் கினர். அரண்மனைக்குள் அச்சம் படை எடுத்தது.அணி அணியாக மக்கள் கிளம்புவர், எதிர்ப்படும் ஆதிக்கக்காரரை அடித்து நொறுக்குவர். விடுதலைக்குப் பாடுபடுவோரின் பாதுகாப்புப் படை திரண்டது. பாஸ்ட்டிலி சிறைச்சாலை துளாக்கப்பட்டது ஜூலை 14ல்! மக்கள் அதனை விழாவாக்கி மகிழ்ந்தனர். வேண்டுகோளின்படி,