பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய பெருங் காற்றைத் தடுத்து நிறுத்திவிடத் தருக்களால் முடிவதுண்டோ--வேரறுந்தன்றோ பெரு மரங்கள் சாய் கின்றன, பெருங் காற்றின் முன்பு! இப்படையும் அது போன்றே, எதிர்ப்புகளை முறித்துக் கீழே சாய்த்துவிட்டு, இடியோசை போன்ற வெற்றி முழக்கமிட்டபடி, முன்னேறும் வேகவேகமாக, குறித்த இடம் நோக்கி, விட்ட கணைபோல தாக்கும் சக்திமட்டுமல்ல, தாங்கிக் கொள்ளும் சக்தி யும் நிரம்பக் கொண்ட படை; வெட்டி வீழ்த்த மட்டுமல்ல, வீழ்ந்துபடவும் அஞ்சாது நடமிடுகிறது படை. 96 பயம்கொண்டு பதுங்க மறுக்கிறது; பசி, தூக்கம். அதனைத் தொட அஞ்சுகின்றன! பாய்வோம், பாய்வோம், மடைகளை உடைத்தெறிந்திடும். வெள்ளம்போல், தீயைப் போல என்று கூறாமற் கூறிக்கொண்டு செல்கிறது; இரத்தம் பொங்குகிறது! இருபது ஆண்டுகள், இதுபோல! "எதிரியின் படைபலம் மிக அதிகம்." T. பொருள் என்ன? விளங்குகிறதா? நம்மிடம் எதிரிக்கு உள்ள பயம் அவ்வளவு. பெரும்படை திரட்டித்தான் தனக்கு வர இருக்கும் ஆபத்தைத் தடுத்துக் கொள்ள முடியும் என்று கருதுகிறான். வீரதீரமாகப் போரிடுபவர்கள் என்பதை உணர்ந்துகொண்டு விட்டனர் மாற்றார் என்பதற்கு இதை விடச் சான்று வேண்டுமோ! படை வருகிறது என்றதும் தொடை நடுக்கம் ஏற்பட்டுவிடுகிறது மாற்றார்களுக்கு. இந்த நிலை கண்டு, கெக்கலி செய்திட வாரீர்! கிலிகொண்டு ஒரு பெருத்த கும்பல் கூடிவிட்டிருக்கிறது. விரட்டி அடித் திடக் கிளம்புவீர், வெற்றி நம்மை அழைக்கிறது! வீரர் களுக்கு அழைப்பு, கோழைகளுக்கு அல்ல! கோழைகளா!! கோழைகள், இந்தக் கொடியின் கீழ் ஏது!! இது வீரர் படை, வெற்றிப்படை; தீரர் படை, தியாகப் படை!! வரிசையிலே, களம் நோக்கிப் பாயும்போது படை பாடி வீடுகளிலே இதுபோன்ற உரையாடல்! எதிரியின் படைபலம் அதிகம் என்று கேள்விப்பட்ட வுடன் என்ன ஆகுமோ நமது கதி என்ற ஏக்கம் கொள்வ தில்லை. எதிரியின் படை அதிகமாகவாக, வேட்டை மும்முர