பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 இருபது ஆண்டுகள் மாகும், விருதுகள் விதம்விதம் பெறலாம், விருந்தின் சுவை மிகுதியாகும் என்று எண்ணிக் களித்திடுவர், அந்தப் படை யினர். கிளம்பிற்றுகாண் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தை!!--என்று கவிகள் சிந்து பாடிடுவர்,அத்துணை வீரம் கொப்பளிக்கும் படையினரிடம்! வீரம் கொப்பளிக்கும் நிலையினர் பாய்ந்திடும் இடமெங்கும், இரத்தம் பொங்கும்! வெறியோ? மண்டலங்களைத் தாக்கிட வேண்டும், மாடுமனை அழித்திட வேண்டும், இரத்தச் சேற்றிலே புரண் டிட வேண்டும் என்ற வெறியோ எனில், வெறி அல்ல! எமது கொடி எங்கணும் பறந்திட வேண்டும்! எமது ஆணைக்கு எவரும் அடங்கிடுதல் வேண்டும்! எமக்கு நிகர் எவரும் இல்லை என்ற பேருண்மை நிலை நாட்டப்பட வேண்டும் என்றனர் எழுச்சி கொண்டிருந்த படை. வீரர்கள்—கொண்டி ருந்தனரா? எழுச்சி ஊட்டப்பட்டிருந்தது அவர்களுக்கு! வெறி- எழுச்சி- ஆர்வம் --ஆவல் -- இவை வெவ்வேறு வார்த்தைகள் — வெறும் வார்த்தை மாற்றங்கள் மட்டுமா இவை! நிலைமை மாற்றங்கள்? நினைப்பிலே ஏற்படும் மாற் றங்கள்! போக்கிலே மூட்டப்படும் மாற்றங்கள்! அந்த மாற் றங்களுக்கு ஏற்ப விளைவுகள் வெவ்வேறாகின்றன. தாயகத்தைத் தருக்கர் தாக்கிடும்போது, நாட்டுப் பாதுகாப்புக்காக, நாட்டு உரிமைப் பாதுகாப்புக்காகப் போரிடும் படையினர் காட்டிடும் வீரம், எழுச்சியை அடிப் படையாகக் கொள்கிறது. பிறிதோர் நாட்டின்மீது, படை எடுத்துச் சென்று, தாக்கிப் பிடித்திடலாம். தாள் பணியச் செய்திடலாம். கொன்று குவித்திடலாம், கொள்ளை அடித்திடலாம். சிட் டுப்போல, மல்லிகை மொட்டுப்போல, உள்ள மெல்லியலார் கிடைப்பர்; அலறித் துடித்திடுவர் அதரம் சுவைத்திடும் போது என்ற எண்ணம் கொண்டிடுவோர் வெறிகொண்டலை கின்றனர் என்னலாம். பூ-162-இ-4