பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய நீதிக்காக, நேர்மைக்காக, உரிமை காத்திட, அநீதியை அழித்திடக் கிளம்பும் படை வீரதீரத்துடனும், தியாக உணர் வுடனும், தாளின்கீழ் வீழ்ந்து தாசராவதைக் காட்டிலும், மண்ணிலே மாற்றான் வாளால் வெட்டுண்டு நம் தலை உரு ளட்டும், கழுகு உடலைக் கொத்தித் தின்னட்டும், செத்துத் தொலைந்தான் சீறிப் போரிட்டவன் என்று கூறிக் கேலி பேசட்டும், தாக்க முனைந்தோம், தாள் தொழுதான், உயிர்ப்பிச்சை தாரும். உறக்கு நான் எதனையும் உடைமை யாக்குகிறேன் என்று கெஞ்சினான் என்று எதிரி பேசிடும் பேச்சைவிட என்ற கொடுமையுள்ளது அல்ல சாவு, உணர்ச்சியுடன் போரிடும் படை, மண்ணுக்காக அல்ல, மானங்காத்திட, மாண்பு நிலைத்திடப் போரிடும் படை என்றும் நிலைத்த புகழ் பெறுகிறது. பாவாணர்களின் புக ழாரம் சூட்டப்பட்டு, பலப்பல தலைமுறைகளுக்குப் பின் பும், வீடுதோறும் வீடுதோறும், பேசப்படும் காதைகளுக்கும் பாடப்படும் கவிதைகளுக்கும் உறுபொருளாகிறது, அவர் காட்டும் வீரம்! 98 படைகளைக் கொன்று குவித்து, மண்டலங்களை மண் மேடுகளாக்கி, மணிமுடிகளைக் காலால் உதைத்து விளை யாடி, நகர்களைக் கொளுத்தி, நாசத்தை நடமிடவிட்டுக் கொள்ளை அடித்துக், குமரிகளைக் கற்பழித்து, அடிமை கொண்டு, எஞ்சியோரைச் சித்திரவதை செய்து, சரிந்துவிழும் கட்டிடம், அதன்கீழ் சிக்கிக் கூழானோர் தொகை, பற்றி எரியும் வீடுகள், ஆங்கு பதறிக் கருகிடும் மக்கள்- இவை போன்ற நெஞ்சம் உருக்கும் நிலைமைகளைக் கண்டு, கை கொட்டிச் சிரித்திடும்போக்கு, வீரம் அல்ல--வெறி! எழுச்சி கொண்டவன் வீரன்! தியாக உணர்வுடன் போரிடுபவன் மாவீரன்! வெறி உணர்ச்சியால் ஆட்டி வைக்கப்படும் நிலையிலே போரிடுபவன், மாவீரன் ஆகான்-மனிதன் மிருகமாகிறான். ஒரு நாட்டுப் படைபற்றி எதிரி நாட்டுப்படை. கூறிடும் கருத்தினை ஆதாரமாகக் கொண்டு பெறப்படும் எண்ணம், முற்றிலும் உண்மையானது என்று கூறுவதற்கில்லை. போர்