பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 இருபது ஆண்டுகள் நடந்திடும்போதும், அதை அடுத்துச் சில ஆண்டுகள் வரை யிலும்கூட, உலவிடும் கருத்துக்களைக் கொண்டு, உண்மை என்ன என்பதனைக் கண்டறிதலும் முடியாத காரியமாகும். போர் குறித்துப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பொது நிலையினர், ஆய்வாளர்கள், விருப்பு வெறுப்பற்ற நிலையிலே வெளியிடும் கருத்துக்களே, பெரும் அளவு உண்மை நிலையை எடுத்துக் காட்டுவனவாக இருக்க முடியும். ஒரு நாட்டுக்கும் மற்றோர் நாட்டுக்கும் ஏற்பட்டுவிடும் தொடர்புபற்றி, மூண்டுவிடும் போர்பற்றி, எல்லாக் கார ணங்களும், எல்லா உண்மைகளும், எப்படியும் வெளிவந்தே தீரும் என்றுகூடக் கூறுவதற்கில்லை. எத்தனையோ உண்மை கள் வெளிவராமலே போய்விடக் கூடும். மூச்சடக்கி மூழ்கி மூழ்கி எடுத்தாலும், கடலிலே உள்ள எல்லா முத்துக்களை யுமா எடுத்து விடமுடிகிறது!! போர் என்பதே வெறிதான் - மனிதன் நிலைதடுமாறி டும்போதும் - அறநெறி மறைந்திடும்போதும் விளைவதே போர்! போர் எந்த நோக்கத்துக்காயினும் சரி, காரணம் எத்துணை உண்மையானதாக இருப்பினும், நோக்கம் எவ் வளவு தூய்மையானதாக அமையினும், போர் வெறுக்கத் தக்கதே!கண்டிக்கத்தக்கதே ! ஒருநாடு இழைக்கும் கொடுமை, கொண்டிடும் அநீதியான போக்கு என்பவைகளைக் கண்டிக்க, களைந்தெறிய நடத்தப்படும் போர் எனினும் கூடப், போர் மனிதகுலத்துக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதிலே ஐய மில்லை. எத்துணை புனிதத்தன்மையுடையது என்று எடுத்து விளக்கப்பட்டாலும், போர்ச்சூழ்நிலை ஏற்பட்ட பிறகு, மக்களிடம், விரும்பத்தகாத வெறுப்புணர்ச்சிகள், கிளம்பி விடுவதைத் தடுக்க இயலுவதில்லை--- அதனைக் கவனிக்கும் போது போர் மனித குலத்துக்குக் கேடு பயக்கும் என்பதை மறுக்க இயலாது என்று பொது நீதி பேசுவோர் உளர்; அந்தப் பொது நீதியை நிலைநாட்டுவது முடியாததாக இன்று வரை இருந்துவருகிறதே தவிர, அதன் மாண்பினை, உண் மையினை, மறுத்துப் பேசுவார் எவரும் இல்லை.