பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

இரண்டாவது நாள் அந்திக் கருக்களில் குமாரி பவானி கண்டெடுக்கப் பட்டாள்.

ஆமாம்; கண்டுதான் எடுத்தார்கள் அவளை! பள்ளிக் கூடத்தின் தோட்டத்திலே சில செடிகளிடைலே கிடந்தது அவள் உடல். தக்காளிப் பழம் போல் ஜம்மென் மின்னிய தேகம் வெளுத்துக் கிடந்தது. உயிர் ஊசலாடிக் கொண் டிருந்தது. கண்கள் எதையோ கண்டு பயந்து மிரண்டது போல் நிலை குத்தி நின்றன. உதடுகள் சற்றே பிரிந்து வெளிறிப்போய்க் காட்சியளித்தன. ரத்தம் இழந்து கிடந்தாள் அவள்.

இந்நிலை அவளுக்கு ஏற்படுவானேன்? அவள் திடீரென்று மறைந்த மாயம் என்ன? அவள் பதுங்கி யிருந்த மர்மம் யாது? அவளை யார் என்ன செய்து இக்கதிக்கு ஆளாக்கினார்கள்? -- எவரெவரோ என்னென்னவோ கேட்டார்கள். பதில் யார் சொல்வது!'

குமாரி சவம் போல் கிடந்தாள்.

அந்த ஊரின் பிரபல டாக்டர் பரிசோதித்து, அவள் தேகத்தில் ரத்தக் குறைவு ஏற்பட்டுள்ளது; புது ரத்தம் உடனே செலுத்தப்பட வேண்டும் என்று சொன்னார். அவ்விதம் செய்தாலும், அவன் பிழைப்பாள மாட்டாளா என்து தன்னால் உறுதி கூற முடியாது என்றும் கையை விரித்தார்.

ஆயினும் சிகிச்சை ஆரம்பமாயிற்று.

'எல்லாம். அந்த ரத்தக் காட்டேறியின் வேலை தான்' என்று சொன்னார்கள் ஆதியிலிருந்தே அவ் எண்ணத்தை வளர்த்தவர்கள்.


5

குமாரி. பவானி பிழைத்து விடுவாள். என்ற நம்பிக்கை பிறந்தது. பலருக்கும். சில தினங்களுக்குள்ளேயே அவள்

2