பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

உடலின் தெம்பு வரத் தொடங்கியது. ஆயினும் அவள் அறிவிலே தெளிவு பிறக்கவில்லை. தெளிவற்று புகை போல் நெளிந்து திரிந்த நினைவுகளை பிடித்திழுத்து ஒருமுனைப் படுத்தி ஈதுதான் நடந்தது; இன்னார் தான் காரணம்' என்று சொல்லும் சக்தி அவளுக்கு வரவேயில்லை.

அர்த்தமில்லாமல், தொடர்பேயில்லாமல், 'மோட்டார்... சத்தம், ரத்தம்... பயமாயிருக்கே? என்று அடிக்கடி முனகிக் கொண்டு கிடந்தாள் அவள். தூக்கத்தில் பேய்க் கனவு கண்டு அலறியடித்து ஓலமிடுகிறவள் போல் 'ஐயோ, அம்மா, நான் வீட்டுக்குப் போகணுமே; என்னை விடுங்க! என்று கத்தினாள். விழித்துக் கொண்டதும் விசாரித்தால் மிரள மிரள விழித்தாள் அவர்ள்.

யாருக்கும் எதுவும் புலனாகவில்லை. 'புள்ளெ எதையோ கண்டு பயந்திருக்கு. பிசாசு குத்தம்தான்' என்று பெரியவர் கள் விமர்சித்தார்கள்.

சில வாரங்கள் ஓடின. மீண்டும் ஊரை உலுக்கியெடுத்து விட்டது ஒரு நிகழ்ச்சி.

'ரெண்டுங்கெட்டான்புரம் ரம்பை' என்று பெயர் பெற்றிருந்த தேவகியம்மா அந்த ஊரையொட்டிச் செல்லும் ரயில் தண்டவாளத்தருகே உள்ள கற்றாளைப் புதர் ஒன்றிலே பிணமாகக் கிடந்தாள்; அங்கு கழுகுகள் வட்டமிட்டதைக் கண்டு ஆராய்ச்சி நடத்தவும் அவள் உடல் கண்டெடுக்கப் பட்டது. போலீசார் புலன் விசாரித்து வருகிறார்கள். இந்த செய்தி பரப்பரப்பு உண்டாக்காதா என்ன?.

தேவகியம்மா மலையாளத்திலிருந்து இறக்குமதியான சரக்கு. பகலில் அவள் தொழிலால் மருத்துவச்சி. இரவிலில் சுலபமாக பணம் பண்ண உதவும் 'தொழில்'!. ஆனால் அதில் கௌரவமும் அந்தஸ்தும் அவளுக்கு அதிகம்.

குளுமையான இள வர்ணங்களில் திகழும்---ப்ளெயின் லைட் கலர்-- ஸாரிதான் அவள் உடுத்துவாள். வய