பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

அதைவிட மிகவும் பெரிதாக யிருந்தன மூன்று பூக்கள். சத்தத்தில் தோய்த்தெடுத்த கடற்பஞ்சு மாதிரிப் பட்டது. முதலில். பிறகு கவனிக்கக் கவனிக்க வெறிக் கவர்ச்சி தரும் தன்மை பெற்றிருப்பதாகத் தோன்றியது. அந்த அறையில் இன்னும் என்னென்னவோ இருந்தன. எனக்குக் கவனிக்கும் அவா இல்லை. என் உள்ளம் பதைத்தது. வீட்டுக்குப் போக வேண்டுமே என்ற துடிப்பு ஏற்பட்டது. அவர் சிரித்துக் கொண்டே வந்தார். 'என்னை இங்கே ஏன் கொண்டு வந்தீர்கள், எங்கள் வீட்டிற்குக் கூட்டிப் போகாமல்? வீட்டில் எல்லோரும் தேடுவார்களே' என்றேன். 'அதிர்ச்சியினால் மூர்ச்சை போட்டுக் கிடந்தாய் அதைத் தெளிவித்து......' அதற்கு என்னை இங்கே கொண்டு வருவானேன்? எங்கள் விட்டில் சேர்த்திருந்தால்...' அவர் சிரித்தார். 'உங்க வீடு எப்படியம்மா தெரியும் ? பயப்படாதே பவானி, உன்னைப் பத்திரமாகக் கொண்டு போய்ச் 'சேர்க்கிறேன் என்றார். அவர் குரலில் எவ்வளவு குழைவிருந்தது. நயவஞ்சகப் பாம்பு ! எனக்குச் சிறிது அமைதி பிறந்தது. 'இது என்ன பூ ! இவ்வளவு சிவப்பான பூவை நான் இன்றுவரை பார்த்ததே யில்லை, ரத்தக் கட்டிகள் மாதிரி...? என்று நான் பேச்செடுத்ததும் அவர் சிரித்தார். 'ரத்த புஷ்பம்தான் அதன் பெயர் !' என்று கூறிவிட்டுச் சிரித்தார். அவர் சிரிப்பு என்னை என்னவோ பண்ணியது. என்ன சொல்வது என்று தெரியாமல் நான் உட்கார்ந்திருந்தேன். அவரே பேசினார். 'பவானி, இதற்கு இயற்கையாகவே இந்த நிறம் இருக்கவில்லை. எனது ஆராய்ச்சி தந்த செல்வம் அது. அதில் எவ்வளவு மோகன சக்தியிருக்கிறது. எத்தகைய செந்நிறம் அதற்கு !இதற்காக நான் எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடத்தினேன். சில செடிகளைப்