பக்கம்:இருளும் ஒளியும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1

குமுறும் ஹிமுடியம்

தபால் இலாகாவினருக்குச் சிரமம் வைக்காமல் செய்திகள் மின்னல் வேகத்தில் சாவித்திரியின் ஊருக்கு எட்டின. சாவித் திரிக்குப் பழைய சலுகைகள் அவ்வளவாக இப்பொழுது பிறந்த விட்டில் இல்லை. கல்யாணத்துக்கு முன்பு தன்ளுேடு ஒட்டிக் கொண்டு, தான்் கோபம் அடைந்தாலும் பாராட்டாத சீதா இப் பொழுது வேற்று மனுவியாகக் காட்சி அளித்தாள். அவளுக்கு மட்டற்ற வேலைகள் கிடந்தன. ஹிந்தி வகுப்புக்குப் போக வேண்டும். பிறகு சங்கீதம் பயிலவேண்டும்; கலாசாலைக்குப் போக வேண்டும்; வீட்டில் அம்மாவுக்கு உதவியாக ஏதாவது செய்து முடித்தாக வேண்டும். சகோதரியிடம் மனம்விட்டுப் பேச என்ன இருக்கிறது? சாவித்திரியைவிட நான்கைந்து வயது சிறியவளான சீதா ஏன் அப்படி ஒதுங்கிச் செல்கிருள்? சந்துரு, சாவித்திரியுடன் அதிகம் பேசுவதேயில்லை. ஆதியிலிருந்தே இருவருக்கும் ஒத்துக்கொள்கிறதில்லை. இருவரும் எதையாவது குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார்களானல் மணிக் கணக்கில் ஒயமாட்டார்கள்.

இதனிடையில் பாட்டி, தினம் தினம் ஏதாவது ஒரு புதுச் செய்தியைக் கொணர்ந்து தெரிவிப்பாள்.

'ஏண்டி! என்னவோ விழா நடத்தினைமே உன் ஆம்படை யான்? அமர்க்களப்பட்டதாம். அவள் இருக்கிருளே ஒருத்தி, ஸ்ரஸ்வதியோ, லக்ஷ்மியோ? பாட்டுக் கச்சேரி செய்தாளாம்! திறந்த வாய் மூடாமல் உன் கணவன் அவள் எதிரில் உட்கார்ந்து கேட்டுக்கொண் டிருந்தாளும். போதாக்குறைக்கு ஊரிலே யிருத்து ஒரு பெண் வந்திருந்ததாம். நேற்று அங்கிருந்து வந்த கோபு வீட்டு ராமு என்னிடம் சொன்னன். உன் அம்மா காதில் விழுந்தால் சண்டைக்கு வருவாள். என்னலேயே நீ கெட்டுப் போய் விட்டாயாம். அவள்தான்் அதை வாய்க்கு வாய் சொல்லு கிருளே' என்று பாட்டி யாரும் அருகில் இராத சமயம் பார்த்துச் சாவித்திரியிடம் தெரிவித்தாள்.