பக்கம்:இருளும் ஒளியும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுறம் ஹிருதயம் 97

பிடித்ததுபோல் அவள் வெகுநேரம் உட்கார்ந்து இருந்திருக்க வேண்டும்.

அறைக் கதவை யாரோ லேசாகத் தட்டினர்கள். சாவித்திரி எழுந்து கதவைத் திறந்ததும் மங்களம் வாயிற்படியில் நின்றிருந் தாள். 'சாப்பிடாமல் மணி பன்னிரண்டு அடிக்கப் போகிறதே!' என்று அன்புடன் அவளே அழைத்தாள் மங்களம். அழுது ரத்த மெனச் சிவந்திருக்கும் மகளின் கண்களைப் பார்த்ததும் அந்தத் தாயுள்ளம் பாகாய்க் கரைந்தது. கையைப்பற்றி ஆசையுடன் அழைத்துப்போய் சமையலறையில் உட்கார்த்தி அன்புடன் உணவைப் பரிமாறினுள் மங்களம்.