சங்கக் தடன் ரகுபதி 101
'ஐய்ய! உன் யோசனை பலமாக இருக்கிறதே! வியர்க்க விறுவிறுக்க வேர்வை சொட்டி வழிய வெயிலில் நடந்து போய்த் தான்் சங்கீதத்தை அநுபவிப்பார்களோ? வருகிறபோது நடந்து வரலாம் அத்தான்். "ஜிலு ஜிலு" வென்று குளுமையாக இருக்கும். சிரமமும் தெரியாது' என்று அவன் கூறியதை ஆட்சேபித்தாள் ஸரஸ்வதி.
'உன் யோசசின. அதைவிட அருமையாக இருக்கிறது. இரவு வேளையில தனியாகச் சிறிசுகளை அழைத்துக்கொண்டு நடந்து வருகிறதாவது? அதுவும் உன் கால் இருக்கிற வலுவுக்கு நீ நடந்து வர வேண்டும் என்று ஆசைப்படுகிருயே, ஸ்ரஸ்-?' என்று ஸ்வர்ணம் கோபித்துக்கொண்டாள். ஆகவே, மூவரும் பஸ்ஸில் போய் வருவது என்று தீர்மானித்துப் புறப்பட்டார்கள்.
அன்று கச்சேரிக்குச் சென்றிருந்த மூவரின் உள்ளங்களும் வெவ்வேறு கற்பனையில் மூழ்கி இருந்தன. ரகுபதியின் மனம் ஒர் இடத்திலும் நிலைக்காது அலே பாய்ந்துகொண் டிருந்தது. அங்கு வந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்துப் பெருமூச்செறிந் தான்். அவன் மட்டும் எத்தனை காலம் தனிமையை ئے'Dاق பவிப்பது? இந்தக் கேள்வி அவன் மண்டையைக் குடைந்து எடுத்து அவன் தலையை வலிக்கச் செய்தது. சங்கீதம், நாத ரூபமாக இறைவனே வழிபடும் சாதனம் என்பதை அவன் அந்த நிமிஷம் மறந்துவிட்டான். பாடகி பாடும் ஒவ்வொரு பாட்டும் அவனுக்குப் போதையை உண்டு பண்ணியது. "ஆறுமோ ஆவல். ஆறுமுகனே நேரில் காணுது' என்று பாடகி பாடும்போது அவன் மது அருந்தியவனின் நிலையை அடைந்துவிட்டான். மேடையில் அமர்ந்து பாடும் பாடகி தங்கமாக மாறினள். கச்சேரிக் கூடம் அவன் வீடாக மாறியது. அந்த வீட்டில் தங்கம் ஒருத்தி உட் கார்ந்து பாடுவதாகவும், அதை அவன் மட்டும் ரளிப்பதாகவும் கற்பனே செய்துகொண்டான் ரகுபதி!
தங்கம் சிறிது நேரம் பாட்டை ரளித்தாள். பிறகு அங்கே கூடியிருக்கும் பெண்மணிகளின் நடை, உடை, பாவனைகளைப் பெரிதும் கவனிக்க ஆரம்பித்தாள். வயலிலே கிராமத்தில் வேலை செய்யும் பெண்கள் போட்டுக்கொள்ளும் சொருக்குக் கொண்டையைக் கூட அல்லவா இந்த நகரத்தில் நாகரிகமாகப் போற்றுகிரு.ர்கள் என்று நினைத்தாள். ஒய்யாரமாக ஒருத்தி வந்தாள். அடர்ந்த கூந்தலை அள்ளி வளைத் து உச்சந்தலையில் கொண்டை போட்டுக் கொத்துக் கொத்தாக ரோஜா மலர்களைச்