102 இருளும் ஒளியும்
செருகி இருந்தாள். கழுத்திலே நாலேந்து முத்துச் சரங்கள். காதில் மாங்காய் வடிவத்தில் செய்த தோடுகள். தோளில் சரிந்து விழும் உயர்ந்த மைசூர் ஜார்ஜெட் புடைவை. தங்கம் வாயைப் பிளந்துகொண்டு அவளேயே பார்த்தாள். மற்றொரு பெண் வந்தாள். அடக்கமாகத் தலையைக் குனிந்துகொண்டு. காஞ்சிபுரம் பட்டுப் புடைவை உடுத்தி, ஜடைக் குஞ்சலம் ஊசலாட, வைரங்கள் மின்ன, அமரிக்கையாய்த் தலைப்பைப் போர்த்திக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். பல ரகங்களில் உடை அணிந்துவரும் பெண்களைப் பார்ப்பதில்தான்் தங்கம் பெரிதும் தன் பொழுதைக் கழித்தாள் எனலாம். ஸரஸ்வதி ஆடாமல், அலுங்காமல் பாடகியின் இசை இன்பத்தில் மூழ்கி இருந்தாள். வேறு எதிலும் அவள் மனம் செல்லவில்லை. இத்தகைய தெய்வீகக் கலைக்குத் தன் வாழ்நாளே அர்ப்பணம் செய்வதைவிட வேறு பயன் திரக்கூடியது ஒன்றுமில்லை என்று நினைத்து'ஆனந்தப்பட்டாள் அவள்.
அவள் சிந்தனையைக் கலைத்து மெதுவான குரலில் ரகுபதி, * ஸரஸ்- எனக்கு உடம்பை என்னவோ செய்கிறது. வீட்டுக்குப் போகலாம் வருகிருயா?" என்று கூப்பிட்டான். மூவரும் எழுந்து வெளியே வந்தார்கள். - உடம்பு சரியில்லை என்றால் டாக்ஸி' வைத்துக்கொண்டு போகலாமே, அத்தான்்' என்ருள் ஸரஸ்வதி. பயத்தால் அவள் முகத்தில் முத்துப்போல் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன.
"அப்படி பயப்படும்படி ஒன்றுமில்லை ஸரஸு. லேசாகத் தலையை வலிக்கிறது. உன்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டு நானும் தங்கமும் காற்ருட நடந்து வருகிருேம். அம்மாவைக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்' என்ருன் ரகுபதி.