பக்கம்:இருளும் ஒளியும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

சாலை வழியே

நகரத்திலிருந்து ரகுபதியின் வீட்டிற்கு இரண்டு மைல் களுக்குமேல் இருக்கும். சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஓங்கி உயர்ந்து வளர்ந்த அசோக மரங்கள் கப்பும் கிளைகளுமாகத் தழைத்து நின்றன. பகல் வேளைகளில் சூரியனின் வெப்பம் தெரியாமலும், இரவில் நிலாக் காலங்களில் பசுமையான இலைகளின் மீது நிலவின் கிரணங்கள் தவழ்ந்து விளையாடுவ தாலும் அச்சாலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அங் கொன்றும், இங்கொன்றுமாகக் கட்டப்பட்டிருக்கும் பங்களாக் களிலிருந்து வீசும் மலர்களின் மனமும் சாலையில் லேசாகப் பரவுவதுண்டு. ஸரஸ்வதியைப் பஸ் ஏற்றிவிட்டுத் தங்கத்துடன் திரும்பிய ரகுபதி சிறிது நேரம் வரையில் ஒன்றுமே பேசவில்லை. வளைந்து செல்லும் அந்த அழகிய சாலையில் அவ்வப்போது ஒன்றிரண்டு கார்களும், வண்டிகளும் போய் வந்துகொண் டிருந்தன. தங்கம் இதுவரையில் ஒர் ஆடவனுடன் தனித்து இரவு வேளையில் எங்கும் சென்றதில்லை. மனம் பயத்தால் 'திக் திக் கென்று அடித்துக்கொள்ள, ரகுபதியைவிட்டு விலகி நாலடி முன்னலேயே அவள் சென்றுகொண் டிருந்தாள். ரகுபதிக்கும். அவன் எதற்காகத் தங்கத்தைத் தனியாக அழைத்து வந்தான்் என்பதும் புரியவே இல்லை. ஸரஸ்வதி என்ன நினைக்கிருளோ? வீட்டில் அலமு. அத்தையும், அம்மாவும் என்ன சொல்வார்களோ' என்றும் பயந்தான்். மருட்சியுடன் அடிக்கடி அவனைத் திரும் பிப் பார்த்த தங்கம் ஒருவழியாக, 'அத்தான்்! உங்களுக்குத் தலைவலி குறைந்திருக்கிறதா? என்னையும் ஸரஸ்'அக்காவுடனேயே அனுப்பி இருக்கலாமே?' என்று கேட்டாள். ரகுபதி ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தான்். ஒருவிதக் களங்கமும் இல்லாமல் விளங்கும் அந்த அழகிய வதனத்தில் உலாவும் இரண்டு பெரிய கண்களைக் கவனித்தான்். வில்லைப்போல் வளைந்து இருக்கும் புருவங்களைக் கவனித்தான்். எப்போதும் சிரிப்பதுபோல் இருக்கும் அவள் அழகிய அதரங்களைக் கவனித்தான்். கானல் நீர் தொலைவில் பளபளவென்று மான்