104 இருளும் ஒளியும்
களுக்குத் தெரிவதில்லையா? நெருப்புப் பறக்கும் கடுங் கோடையில் தெளிந்த நீர்ப் பிரவாகம் பொங்கிப் பெருகுகிறது என்று எண்ணித்தான்ே மான் கூட்டங்கள் அங்கு விரைகின்றன? சாவித்திரி தன் வாழ்வில் ஏற்படுத்திய பள்ளத்தைத் தங்கத்தால்தங்கத்தின் அன்பினல் - நிரவமுடியும் என்று ரகுபதி ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் கவனிக்கும் ரகுபதியைத் தங்கம் பார்த்தாள்.
என்ன அத்தான்்! அப்படிப் பார்க்கிறீர்களே? என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்தார்களே புமான்கள்! அவர்கள் யாருங்கூட இப்படிப் பார்க்கவில்லையே என்ன! முதலில் எங்கள் வீட்டுக் கூரையைப் பார்த்தார்கள். பிறகு கீழே அவர்கள் உட்கார விரித்திருப்பது, பழைய ஜமக்காளமா அல்லது விலையுயர்ந்த ரத்தினக் கம்பளமா என்பதைக் கவனித் தார்கள். அப்புறம், எங்கள் வீட்டு "டிபனை'க் கவனித்தார்கள். பிறகு, மணப் பெண் வந்திருக்கிருள். பாருங்கள் ஸ்வாமி: என்று அவர்கள் கவனத்தை என்பேரில் திருப்புவதற்கு நான் ஏதாவது பாடி ஆகவேண்டும். இதுவரையில் கவனிப்பதற்கு அவகாசம் இல்லாமல் இருந்தவர்களுக்குத் திடீரென்று என்மீது கருணை பிறந்துவிடும். ஒரு அம்மாள் என் அருகில் வந்து பரபர வென்று பின்னலிட்டிருக்கும் என் கூந்தலை அவிழ்த்து மறுபடியும் பின்னுவாள். 'இதென்ன ஆச்சரியம்?' என்று நான் அதிசயப் பட்டபோது எனக்கு இருப்பது நிஜமான கூந்தலா அல்லது செயற்கையா என்று கண்டுபிடிப்பதற்காகத்தான்் இவ்வளவும் என்று தெரிந்தது! இதெல்லாம் ஒன்றுமில்லாமல் இருக்கும் போது நீங்கள் எதற்கு அத்தான்் என்னை இப்படிப் பார்க்க வேண்டும்?' - இப்படிக் கூறிவிட்டு தங்கம் 'கலகல' வென்று. சிரித்தாள்.
ரகுபதியின் முதுகில் யாரோ சாட்டையால் அடிப்பதுபோல், இருந்தது. தங்கத்தின் சிரிப்பொலியைக் கேட்டு. ஒருவேளை தனக்கு ஏற்பட்டிருந்த பலவீனத்தைத் தங்கம் கண்டுபிடித்து விட்டாளோ? என்று நினைத்துப் பயந்துபோனன். அவன் மெது வான குரலில் அவள் அருகில் நெருங்கி, 'தங்கம்! நாளைக்கு நி: ஊருக்குப் போகிருயே. ஏன் இப்பொழுதே போக வேண்டுமா? இன்னும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போயேன்" என்ருன்.
தங்கம் கபடமில்லாமல் சிரித்துக்கொண்டே, எதற்காக அத்தான்் என்னை இருக்கச் சொல்லுகிறீர்கள்? நான் இருப்பதால்