σ: η 25ο வழியே 105・
உங்களுக்குச் சந்தோஷம் ஏற்படுகிறதா? ஒருவேளை சாவித்திரி மதனி ஊரிலிருந்து வருகிருளா? அவளைப் பார்த்துவிட்டுப் போகச் சொல்லு கிறிர்களா என்ன?' என்று கேட்டாள்.
ரகுபதி மறுபடியும் திடுக்கிட்டான். ' என்ன? இந்தப் பெண்ணுக்கு மைேதத்துவம் தெரிந்திருக்கிறதா? இதுவரையில்இன்று வரையில்-நிஷ்களவகமாக இருந்த மனத்தில் களங்கம் எற் பட்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? ஒருவேளை நாம்தான்் தத்துப்பித் தென்று நடந்துகொண்டு விட்டோமோ என்று ரகுபதி மனத்தைக் குழப்பிக்கொண் டிருந்த சமயம், தங்கம் அவன் அருகில் நெருங்கி, சாவித்திரி மத னிக் கும் உங்களுக்கும் ஏதோ மன ஸ்தாபமாமே? எங்கள் ஊரில் பேசிக்கொண்டார்கள். உங்களிடம் கோபித்துக்கொண்டுதான்ே மதனி பிறந்தகம் போயிருக்கிருள்? அப்படித்தான்ே அத்தான்்? போகிறது. கோபத்தையெல்லாம் மறந்துவிடுங்கள். வரப் போகிற தீபாவளிப் பண்டிகைக்கு வேட்டகம் போய் மத னியை அழைத்து வந்து விடுங்கள். ஊருக்குத் திரும்பும்போது எங்கள் ஊருக்கு வாருங்கள், அத்தான்்' என்று அவனே அன்புடன் அழைத்தாள். *
தங்கம் சாதாரணப் பெண் தான்். அறிஞர்கள் கற்றிருக்கும் ஜோதிஷ சாஸ்திரமும், மேதாவிகள் படித்திருக்கும் மனோதத்துவ மும் அவளுக்குத் தெரிய நியாயமில்லை. வான வெளியைப்போல் பரிசுத்தமானதும், தெளிந்த நீரைப்போன்ற களங்கமற்ற மனத்தைப் படைத்த தங்கம் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்துப் பெண். பெரிய பெரிய சாஸ்திரங்களையும், படிப்புகளையும் அவள் எப்படிக் கற்றிருக்க முடியும்?
மறுபடியும், அமைதியான சாலை வழியாகத் தங்கமும், ரகுபதியும் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள். ரகுபதியின் மனம் ஒரேயடியாக இருண்டு கிடந்தது. வான வீதியில் எண்ணற்ற தாரகைகள் பளிச்சிட்டன. வளர்பிறை ஆதலால் மூளிச் சந்திரன் மங்கலாகப் பிரகாசித்துக்கொண் டிருந்தான்். தங்கம் அவன் அருகிலேயே வந்துகொண் டிருந்தாள். அவள் தலையில் சூட்டி இருந்த முல்லைப் புஷ்பங்களின் மனம் 'கம் மென்று வீசியது. தொலைவில் ஊரின் ஆலய கோபுரம் தெரிந்தது. சோர்ந்த மனத்துடன், ரகுபதி எதுவும் பேசாமல் விரைவாக நடந்தான்். வீட்டிலே பெரியவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து தங்கமும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.