பக்கம்:இருளும் ஒளியும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2<。

முள்ளின் வேதனை

பரிவுடன் மகனுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டுக் கீழே சென்ற ஸ்வர்ணத்திற்கு வருத்தம் தாங்கவில்லை. சங்கீத விழாவுக்கு நாட்டுப்பெண் வ்ராத விஷயம் ஊராருக்குத் தெரியும். நல்லதோ கெட்டதோ எதுவும் ஊராருடைய அபிப் பிராயத்துக்கு இணங்கித்தான்் நடக்க வேண்டியிருக்கிறது. இது உலக இயல்பு. 'இருந்து, இருந்து ஒரே பிள்ளை. வீட்டிலே லகடினமாக நாட்டுப்பெண் இராமல், வந்ததும் வராததுமாகப் பிறந்த வீட்டில் போய் மாசக் கணக்கில் உட்கார்ந்துகொண் டிருப்பது அழகாக இருக்கிறது!' என்று காத்களுர் அலமு வேறு எப்போதும் ஸ்வர்ணத்திடம் கூறி அவள் மனத்தை வாட்டிக்கொண் டிருந்தாள். ==

சாவித்திரி வருவதற்கு முன்பாவது வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவி இருந்தன. தினம் தவருமல் ஸரஸ்வதி விடியற்காலமும், சாயந்தரமும் பாட்டைச் சாதகம் செய்து வந்தாள். இப்பொழுதெல்லாம் எப்பொழுதோ அத்தி பூத்தாற் போல் பாடுவது என்று வைத்துக்கொண்டுவிட்டாள் ஸரஸ்வதி. பூஜை அறையை மெழுகும்போதும், கோலம் போடும் போதும், இறைவனுக்கு மாலை கட்டும்போதும் மட்டும் மெதுவாக மன துக்குள் பாடிக்கொள்வாள். பிறவியிலேயே அவளுடன் கலந்து விட்ட அந்த இசை இன்பம் அவள் மனத்தைவிட்டு ஒரு கணமும் அகலவில்லை. வாயைத் திறந்து பாடினுல்தான்், டாட்டா? ஊர் ஊராகச் சென்று கச்சேரிகள் செய்தால்தான்் சங்கீத மா? நித்திரை யிலும் விழிப்பிலும் அவள் மனம் இசை இன்பத்தை அநுப வித்துக்கொண்டே யிருந்தது. ஸரஸ்வதியின் பரந்த மனத்திலும் ஒருவிதத் துயர் குடிகொண் டிருந்தது. அவளால்தான்் வீட்டில் இவ்வளவு சச்சரவுகளும் நேர்ந்துவிட்டதாகக் கருதினுள். இசை விழாவின்போது, தான்் கச்சேரி செய்ய ஒப்புக்கொண்டதே தவறு என்று நினைத்தாள். சாவித்திரியின் ஊருக்குச் சென்று அவளே அழைத்துவந்து ரகுபதியிடம் சேர்த்துவிடுவது என்று கூட யோசித்துப் பார்த்தாள். ஆனல், அங்கு அவளுக்கு எந்த