பக்கம்:இருளும் ஒளியும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 இருளும் ஒளியும்

விதமான வரவேற்பு கிடைக்குமோ? இதற்குள் ஊர் வதந்திகள் ஒன்றுக்குப் பத்தாக இறக்கை கட்டிக்கொண்டு எப்படி எல்லாம் பறந்து சென்றிருக்கின்றனவோ? அத்தான்் ரகுபதி கல்யாணம் பண் ணிக்கொண்டவுடனேயே அவள் அந்த வீட்டிலிருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யப் புகுந்த கதையாக இப் பொழுது நினைத்து வருந்துவதில் என்ன பிரயோஜனம் இருக் கிறது? இவ்விதம் நினைத்து வருந்திக் கொண்டே ஸ்ரஸ்வதி, ாகுபதி கச்சேரியிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்பே தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டுவிட்டாள். ரகுபதி வந்ததும், அவன் யாருடனும் அதிகம் பேசாமல் மாடிக்குச் சென்று படுத்துக்கொண்டதையும் அறிவாள். ஸ்வர்ணம் மாடி யிலிருந்து கீழே வந்ததும் வருத்தம் தாங்காமல் கண்ணிர் பெருக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள். எவ்வளவோ சகிப்புத் தன்மையை அடைந்திருந்த அத்தை அழுவதைப் பார்த்து ஸ்ரஸ்வதி கவலேயுடன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து, ஏன் அழுகிருய் அத்தை? அத்தான்ுக்கு உடம்பு ஒன்றும் இல்லையே?' என்று விசாரித்தாள்.

இதற்குள்ளாக அலமு ஊருக்குப் புறப்படுவதற்காக மூட்டை களைக் கட்டிவைத்துவிட்டு, 'அவசரப்பட்டுக்கொண்டு முன்னே பின்னே விசாரியாமல் புது சம்பந்தம் செய்தாயே மன்னி: இப்பொழுது படுகிரு ப் சேர்த்துவைத்து!' என்று ஆத்திரத் துடன் இரைந்து பேசிள்ை. ஸ்வர்ணத்துக்கு அடங்கி இருந்த துக்க மெல்லாம் பொங்கி வந்தது.

இந்தாடி அம்மா! பெண்ணே நான் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வரவில்லே. உன் மருமானும்தான்் வந்தான்். அவன் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிந்துதான்் கல்யாணம் நடந்தது. "

'அந்தச் சவரனேதான்் தெரிறெதே!' என்ருள் அலமு. மறுபடியும் ஏதாவது சண்டை ஆரம்பித்துவிடப்போகிறது என்று நினைத்த ஸரஸ்வதி, அதட்டும் குரலில், 'அத்தை! அத்தா னுக்கு ஒரே தலைவலி என்ருனே. அவன் துரங்குகிற சமயமாக நீங்கள் இங்கே சண்டைக்கு ஆரம்பிக்கிறீர்களே. பாவம், அவனே ப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. போதும் உங்கள் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு, விர்" ரென்று எழுந்து கூடத்தில் பிரகாசமாக எரிந்துகொண் டிருந்த