110 இருளும் ஒளியும்
ஸ்வர்னத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்துகொண் டிருந்: தாள். தோட்டத்தைச் சுற்றிச் சுற்றிவரும் தங்கமும், அலமு வும் விடியற்காலையிலேயே ஊருக்குப் போய்விட்டதால் வீடு. வெறிச்சோடிக் கிடந்தது. கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து. தன் மேலாக்கு பறக்க வீசி வீசி ஊஞ்சலாடும் தங்கம், அவனிடம் ஒா வார்த்தை கூடச் சொல்லாமல் ஊருக்குப் போப்விட்டாள்.
"அத்தான்ிடம் சொல்லிவிட்டு வருகிறேன்' என்று வேக மாக மாடிப்படிகளில் ஏறிய தங்கத்தின் கைகளை ஸரஸ்வதி பற்றி இழுத்தாள்.
'இந்தாடி அசடே! கொஞ்சங் கூட நாகரிகமே தெரிய வில்லையே உனக்கு? நீ இன்று ஊருக்குப் போவதைத்தான்் ஆயிரம் தரம் சொல்லியாயிற்றே. நேற்றெல்லாம் உடம்பு சரியில்லையே அவனுக்கு. இப்போது போப் அவனைத் தொந்தரவு செய்வானேன்?' என்று உரிமையுடன் அதட்டி அவள் மாடிக்குப் போவதைத் தடுத்தவள் ஸரஸ்வதிதான்்.
'எனக்குப் பதிலாக நீயே சொல்லிவிடு, அக்கா' என்று' தங்கம் சிரித்துக்கொண்டே கூறிச் சென்றிருந்தாள். H
= ரகுபதி தீவிரமாக யோசித்தான்். "கொத்துக் கொத்தாக ரோஜாச்செடியில் மலர்கள் குலுங்குகின்றன. பறிக்கவேண்டும்: முகர்ந்து பார்க்கவேண்டும் அதன் மெல்லிய இதழ்களை வருடவேண்டும்" என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவது இயற்கைதான்். அதுபோல் அழகிய தங்கம் வந்தாள். முல்லைச் சிரிப்பால் என் மூடிய மனதை மலர வைத்தாள். பட்டுப். பூச்சி வர்ண ஜாலங்களை வீசுவதைப்போல், நொடிக்கொரு பேச்சும், நாழிக் கொரு வார்த்தையுமாக வளைய வந்தாள். மலர் செறிந்த ரோஜாச் செடியில் மலரைக் கிள்ளும்போது, “சுரீர்” என்று தைக்கும் முள்ளைப்போல, 'ஊருக்குப் போகி,
றேன்' என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் மனதைக், குத்திவிட்டு ஒடி ப்போய்விட்டாள். மலரின் மென்மையை மெச்சுவதுபோல் முள்ளின் வேதனையையும் மெச்சித்தான்்; "சபாஷ்" போடவேண்டும். நேற்று இரவு பூரீராமபிரான், கோவில் முன்பு கைகூப்பி வணங்கி வேண்டிக் கொண்டதை யெல்லாம் மனம் மறந்துவிட்டது. மறுபடியும், 'தங்கம்.
தங்கம்' என்று ஜபிக்க ஆரம்பித்துவிட்டதே! இது என்னடா: