பக்கம்:இருளும் ஒளியும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இருளும் ஒளியும்

எப்படிப் பார்த்தாலும், தன்னேவிட ஒருபடி மேலாகவே கண்டான் அவளை. நல்ல சங்கீத ஞானமும், நிறைந்த சாரீர சம்பத்தும் பெற்றவள் அவள். அழகில் மட்டுத்தான்் குறைந்த வளா? தாழம்பூ மேனியும் சுருண்டு, அடர்த்தியாக, அலே பாயும் கூந்தலும் மருண்ட விழிகளும் குளிர்ந்த உதடுகளும் தாமரை மலர் போன்ற கரங்களும் பெற்று அழகியாகத்தான்் இருந்தாள். அதோடு குடும்பப் பெண்' என்பதற்கு இலக்கணமாக விளங்கு பவள். உஷக்காலத்தில், வெள்ளி முளைத்திருக்கும்போது எழுந்து. முகம் கழுவி, பொட்டிட்டு, ஸ்வாமிக்கு விளக்கேற்றி. வீனே யுடன் இழையும் மெல்லிய குரலில் பா - ஆரம்பித்துவிடுவாள் அவள். அவள் பாட்டைக் கேட்ட பிறகுதான்் அந்த விட்டில் மற்றவர்கள் எழுவார்கள். எனினும் ஒரே ஒரு குறை அவளிடம். அதுவும், ரகுபதியால் ஏற்பட்ட குறைதான்். பால்யத்தில் ரகுபதியின் மாமன் மகளாகிய ஸரஸ்வதியும், அத்தான்் ரகுபதியும் ஒன்ருக விளையாடியபோது ரகுபதி விளையாட்டாகப் பின்புறம் வந்து அவள் கால்களை இடறி விட்டபோது ஸரஸ்வதி விழுந்துவிட்டாள். சாதாரண விளையாட்டு, வினையாகி ஒரு கால் எலும்பு முறிந்து, நிரந்தரமான ஊனம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் குறை ஸரஸ்வதியின் மனத்திலும் அழியாத வடுவை ஏற் படுத்திவிட்டது. என்னதான்் அழகாக இருந்தாலும், என்னதான்் சங்கீதம் தெரிந்திருந்தாலும், ஊனம் ஊனந்தான்ே! ரகுபதியும் பெரியவளுகிய பிறகு, தான்் தவறுதலாகச் செய்துவிட்டதை நினைத்து வருந்தி யிருக்கிருன். 'இசைக்கும், கலைக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்துவிடுகிறேன். அத்தான்். எனக்காக நீ ஒன்றும் வருத்தப்பட வேண்டாம்' என்று ஸரஸ்வதி ரகுபதிக்கு எவ்வளவோ முறைகள் தேறுதல் கூறி யிருக்கிருள். ஆனால், ஒவ்வொரு தினமும் ஸரஸ்வதி, உள்ளம் உருகிப் பாடும் போதெல்லாம் ரகுபதி இந்தப் பழைய சம்பவத்தை நினைத்துக் கொண்டு ஏங்குவான். தான்ே அவளே மணந்துகொண்டு விட்டால் அள்ளிடம் இருக்கும் குறையைப் பாராட்டாமல் இருக்க முடியும் என்று நினைத்து, அவளிடம் அவன் அதைப் பற்றிப் பிராஸ்தாபித்தபோது, அவள் ஒரு குழந்தையைப்போல் கபடமில்லாமல் சிரித்தாள். வெண்கல மணி ஒலிப்பதுபோல் கலகலவென்று சிரித்துவிட்டு, 'அத்தான்்! பாபம் செய்தவர்கள் பிராயச் சித்தம் செய்துகொள்ள வேண்டியது அவசியந்தான்். விளையாட்டாக நேர்ந்துவிட்டதற்காக உன் வாழ்க்கையைப்