பக்கம்:இருளும் ஒளியும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.5

மங்களத்தின் நம்பிக்கை

சாவித்திரியின் பிறந்தகத்தில் முன்னைப்போல உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்கவில்லை. சிந்தனையும் கவலையும் உருவாக மங்களம் அவ்வீட்டுக் கூடத்தில் படுத்த படுக்கையாகக் கிடந் தாள். கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் அவள் உள்ளம் சோர்ந்து நைந்துபோய்விட்டது. தளிர்த்துச் செழித்து வளரும் மரத்தைக் கோடறிகொண்டு வெட்டுவதுபோல், தழைத்துப் பெருக வேண்டிய குடும்பத்திற்குத் தடங்கலாகப் புக்ககத்தில் வாழாமல் பிறந்தகம் வந்திருக்கும் சாவித்திரியைப்பற்றியும்அவள் வருங்காலத்தைப்பற்றியும் - எல்லோரும் கவலை அடைந்தார்கள். வழக்கமாகக் காணப்படும இரைச்சலோ, உற்சாகமோ அந்த வீட்டில் அப்பொழுது நிலவவில்லை. குடும் பத்துக்கு வேண்டியவற்றைக் கவனித்துச் செய்வதற்கு அக்கறை த ள்ளவர்கள் யார் இருக்கிரு.ர்கள்? சீதாவுக்கு அவ்வளவு அநுபவம் போதாது விளையாட்டுச் சுபாவம் படைத்த அவள் தான்் தற்சமயம் குடும்பப் பொறுப்பை நிர்வகித்து வந்தாள். விட்டில் உள்ளவர்கள் அத்தனைபேரும் தன் பேரில் பழி சொல்வதாக நினைத்து சாவித்திரி, அதை அந்நிய இடமாகவே பாவித்தாள். இஷ்டமிருந்தால் யாருடனவது பேசுவாள். இல்லா விடில் அதுவும் இல்லாமல் தன் அறையிலேயே அடைபட்டுக் கிடப்பாள் அவள்.

தேக வலிமையும், சலியாமல் உழைக்கும் திறனுமுடைய தன் தாயார் உடல் மெலிந்து படுத்த படுக்கையில் கிடப்பதைப் பார்த்த சந்துரு, தன் சகோதரியை மனத்துக்குள் வெறுத்தான்். மனைவியின் தேக நிலையைக் கண்ணுற்ற ராஜமையருக்கு மாப் பிள்ளை ரகுபதியின்மீதே கோபம் அதிகமாயிற்று. o மங்களம் தன் பெண்ணின் பிடிவாத குணத்தைக் கண்டு ஆருத் துயரத்தை அடைந்தாள். சிறு வயதிலிருந்தே பரம சாதுவாகவும், யார் எதைச் சொன்னலும் சகித்துக்கொள்ளும் சாமர்த்தியமும் பெற்றிருந்த அவளுக்கு சாவித்திரியின் மனப் போக்கு ஒரு புதிராகவே இருந்தது. சீதாவுக்கும் கல்யாண