I14 இருளும் ஒளியும்
என்றால் பிறகு யாரால் முடியப்போகிறது? சந்துரு யோசித்து விட்டு, 'ஏனம்மா! தீபாவளிப் பண்டிகைக்குப் பத்துத் தினங்கள் கூட இல்லையே. தலை தீபாவளியாயிற்றே. மாப்பிள்ளையை அழைக்கவேண்டாமா? அப்பா. ரகுபதிக்கு ஏதாவது கடிதம் போடுவதாகச் சொன்னரா?' எனக் கேட்டான்.
மங்களம் வருத்தத்துடன் தலையை அசைத்துவிட்டு, அதையெல்லாம் அவர் காதிலே போட்டுக்கொள்வதே யில்லே. நான் சொன்னதற்குத் தலையும் இல்லை காலும் இல்லே' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சந்துரு! நீதான்் மாப் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதேன். அதிலே என்ன தவறு இருக் கிறது? அவசியம் தீபாவளிக்கு வரவேண்டும் என்று எழுதப்பா. அவர் கட்டாயம் வருவதான்ல் நான் எப்படியாவது சமாளித்து ர்ே வரிசைகள் செய்துவிடுகிறேன்' என்ருள் குரல் தழுதழுக்க. நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் மங்களம் கேட்பதைச் சந்துருவால் தட்டமுடியவில்லை. மனைவி ஊரிலிருந்து வந்த பிறகு ஒருவரி கடிதம் கூடப் போடவில்லை. மாமர்ை ஏனே தான்ே வென்று ஒன்றும் தெரியாதவர்போல் இருக்கிரு.ர். மைத்துனன் அழைப்பு அனுப்பி மாப்பிள்ளை தலே தீபாவளிக்கு வந்த மாதிரிதான்்' என்று நினைத்த சந்துரு, காயைத் திருப்தி செய்யவேண்டி, காகிதமும், பேளுவும் எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்்.
சோர்ந்துபோயிருந்த மங்களத்தின் மனத்தில் நம்பிக்கை ஊற்றெடுத்தது. ரகசியமாகப் பிள்ளையின் காதில், சந்துரு! குடும்பச் செலவிலிருந்து சேர்த்த பணம் நூறு ரூபாய்க்குமேல் பெட்டியில் இருக்கிறது. சரிகை வேஷ்டியும், புடைவையும் வாங்கி வந்து உன் பெட்டியில் வைத்து வை. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியவேண்டாம்' என்ருள்.
"ஆகட்டும்' என்று தலையை அசைத்துவிட்டு கையிலிருந்த காகிதத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருந்தான்் சந்துரு. 'தலே தீபாவளிக்கு மாப்பிள்ளை மட்டும் வருவது சம்பிரதாயமில்லை அல்லவா? ரகுபதியுடன் வரக்கூடியவர்கள் அந்த வீட்டில் யார் இருக்கிரு.ர்கள்? ஸரஸ்வதி வருவாளா? இதற்குள்ளாக அவள் மனம் நம்மைப்பற்றியும், நம் குடும்பத்தைப்பற்றியும் என்ன அபிப்பிராயம் கொண்டு விட்டதோ? அவசியம் ஸரஸ்வதியையும் அழைத்து வரச்சொல்லி எழுதுகிறேன். தவருக இருந்தாலும் இருக்கட்டும். சரியாக