118 இருளும் ஒளியும்
கட்டாயம் உன்னுடன் அழைத்து வரவேண்டும். ஆவலுடன் எதிர்பார்க் கிருேம்.
இப்படிக்கு. சந்திரசேகரன். கடிதத்தைப் படித்து முடித்ததும் ஸரஸ்வதி கபடமில்லாமல் 'கல கல' வென்று சிரித்து, 'அத்தை! தலை தீபாவளி அழைப்பு மாப்பிள்ளைக்கா அல்லது எனக்கா என்பது புரியவில்லையே. வெறுமனே பத்துத் தடவை என்னைத்தான்ே வரும்படி சந்துரு எழுதி இருக்கிருர்?' என்ருள்.
"அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் உன்பேரில் கொள்ளை ஆசை. சாவித்திரியின் அம்மாவுக்குச் சதா உன் பேச்சுத்தான்். சீதாவும் கல்யாணத்தின்போது எப்படி ஒட்டிக்கொண்டு இருந் தாள் பார்த்தாயா? நமக்கென்று வந்து வாய்த்திருக்கிறதே அந்தப் பெண்தான்் அவர்கள் வீட்டிலேயே அலாதியாக இருக் கிறது!" என்று ஸ்வர்ணம் கூறிவிட்டு, 'எப்பொழுது அவர்கள் மதித்துக் கடிதம் போட்டிருக்கிருர்களோ அவசியம் நீயும் ரகுபதியும் போய்விட்டு வாருங்கள். இந்தச் சந்தர்ப்பத்திலாவது இருவரின் மனமும் மாறி ஒற்றுமை ஏற்படட்டும்' என்ருள்.
ஸரஸ்வதி கடிதத்தை மறு முறை மனதுக்குள் படித்துக் கொண்டாள். இவருக்கென்ன என்னிடம் அலாதி அன்பு? வருந்தி வருந்தி அழைக்கிருரே. ஒரு வேளை அவருக்கு என்னைஎன்று நினைத்த ஸரஸ்வதியின் மனம் அதற்குமேல் ஒன்றையும் யோசியாமல் தயங்கியது. பிறகு ஸ்வர்ணத்தை நிமிர்ந்து பார்த்து, 'அத்தான்் அவசியம் போக வேண்டியதுதான்் அத்தை. நான் எதற்கு?' என்று கேட்டாள்.
'உன்னை வரச் சொல்லி அந்தப் பிள்ளை எழுதி இருக் கிருனே. முன்பு அவர்கள் இங்கு வந்திருந்தபோதும் கூப்பிட் டார்கள். போய் விட்டுத்தான்் வாயேன், ஸ்ரஸ்-1' என்ருள் ஸ்வர்ணம்.
ஸ்வர்ணம் கூறுவதைச் சரியென்று ஸரஸ்வதியின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே, என்னல் கணவன் - மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, அதனல் பிறந்தகம் போயிருக்கிருள் சாவித்திரி. ஊரிலும் என்னைப் பற்றியேதான்் அவள் குடும்பத்தார் பழி கூறிக்கொண் டிருப்பார்கள். சில விஷயங்களில் ஆண்களின் சுபாவம் பரந்த நோக்கமுடையதாக இருக்கும். ஆகவே, சந்துரு என்னையும் வரும்படி கூப்பிடுகிரு.ர்.