பக்கம்:இருளும் ஒளியும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்க்குப் பிறகு காரம் II9

இதைப்போய்ப் பிரமாதமாக நினைத்துக்கொண்டு போவது தவறு" என்று ஸரஸ்வதி தீர்மானித்துக்கொண்டாள்.

வெளியே சென்றிருந்த ரகுபதி திரும்பியதும் ஸ்வர்ணம் மறுபடியும் கடிதத்துடன் அவன் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டாள். தீவிரமான யோசனையி. ஈடுபட்டிருக்கும் மகனின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே, ரகு! என் பேரில் கோபமோ, வருத்தமோ வைத்துக் கொள்ளாதே. விரோதத்தை வளர்த்துக்கொண்டே போளுல் அது வளர்ந்து கொண்டுதான்் வரும். எதையும் பாராட்டாமல் தள்ளிவிட்டோ மானுல் விரோதம் வளர்வதற்கு இடமில்லையப்பா. தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வர வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தான்் அந்தப் பிள்ளை கடிதம் போட்டிருக்கிமு ன். அவன் அழைப்பிலே எல்லோருடைய அழைப்பும் கலந்திருப்பதாக பாவித்துப் போய்வா. நான்தான்் எவ்வளவு காலம் சாஸ்வதமாக இருக்கப் போகிறேன்? 'தாய்க்குப் பிறகு தாரம்' என்று சொல்லுவார்கள். எனக்குப் பிறகு உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டியவள் சாவித்திரிதான்். அவளும் சிறியவள். உ_கம் தெரியவில்லை. என் வார்த்தையைத் தட்டாதே. ரகு!' என்று உருக்கமாகக் கூறிவிட்டு மகனின் பதிலே ஆவலுடன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள்.

தாயின் கையிலிருந்த கடிதத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே, 'ஸரஸ்வதியும் வருகிருள் இல்லையா?' என்று கேட்டான் ரகுபதி.

'உன்னுடன் 'போய் வா" என்றுதான்் சொன்னேன். அவளுக்குத்தான்் தனியாக ஏதோ லட்சியம், கொள்கை என் றெல்லாம் இருக்கிறதே. அவள் என்ன சொல்லப் போகிருளோ?" என்ருள் ஸ்வர்ண்ம்.

இதுவரையில் இவர்கள் பேச்சில் தலையிடாமல் கையிலிருந்த "மீரா பஜனை'க் கீர்த்தனங்களில் லயித்திருந்த ஸரஸ்வதி, அத்தையைப் பார்த்து, 'இந்த விஷயத்தில் என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள். இன்றைய தினசரியில், அப்பா சர்க்கார் வேலையாக, அயல் நாட்டிலிருந்து சென்னை வந்து, மைசூர் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. நானும் மைசூர் போகப் போகிறேன், அத்தை. அத்தான்் மட்டும் போய்வரட்டும். என்ன அத்தான்் நான் சொல்கிறது?' என்று கேட்டாள்.