பக்கம்:இருளும் ஒளியும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இருளும் ஒளியும்

மூன்று வருஷங்களுக்கு மேலாகத் தகப்பளுரைப் பாராமல். இருந்த பெண்ணேத் தடை செய்வது நியாயம் என்று தோன்ரு. மல் போகவே ஸ்வர்னமும், ரகுபதியும் ஸரஸ்வதியை அதற்கு மேல் வற்புறுத்த வில்லை. அத்துடன் ஸரஸ்வதியிடம் ஒரு. சிறப்பான அம்சம் உண்டு. மனத்துக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தாலும் சரி. கொள்கைக்கு முரணுக இருந்தாலும் சரி. அதல்ை எவ்வளவு நன்மை ஏற்படுவதாஞலும் விட்டுக் கொடுக்க மாட்டாள். ஸரஸ்வதி, சாவித்திரியின் வீட்டுக்குப் போளுல் சட்டென்று சமரலம் ஏற்பட்டுவிடும். சமத்காரமாகப் பேசி எல்லோர் மனதையும் கவர்ந்துவிடுவாள். பழைய விரோதத்தை எல்லோரும் மறந்துவிடுவார்கள். ஆனால் சாவித்திரி புக்ககத்தில் இருந்த நான்கு மாதங்களில் ஒரு தினமாவது ஸரஸ்வதியிடம் இன்முகமாகப் பேசியதில்லை. அவளாகவே வலுவில் சென்று சாவித்திரியிடம் பேசினாலும், அவளை மதிப்பதில்லை. கடைசியாக சாவித்திரி ஊருக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் அன்புடன் அவள் கேட்டுக் கொண்டதைக்கூடப் பாராட்டாமல் சென்ற பெண்ணுடன், நேருக்கு நேர் நின்று, "நான் வந்திருக்கிறேன், பார்! அழையா வீட்டுக்குச் சம்பந்தியாக!' என்று கூறிச் செல்வ. தற்கு வெட்கமாக இராதா? அசட்டுக் கெளரவமும், முரட்டுப் பிடிவாதமும் உடைய பெண்ணிடம் போய் கைகட்டி நிற்கும் படியான நிலைமை ஸரஸ்வதிக்கு ஏற்படவில்லை. "என்னை இரண்டு. பேரும் மன்னித்துவிடுங்கள் அவள் அத்தையிடம் கேட்டுக் கொண்ட பாவனையிலிருந்து அவள் மனத்தில் ஒடும் எண்ணங்களை ஸ்வர்ணம் ஒருவாறு ஊகித்துக்கொண்டாள்.

"இந்த மட்டும் பிள்ளையாவது தீபாவளிக்குப் போகிறேன் என்று ஒப்புக் கொண்டானே" என்று ஸ்வர்ணம் ஆறுதல்

அடைந்தாள்.