2ア
தங்கத்துக்கு அர்ப்பனம்
கடலலைகள் போல் ஒயாமல் பொங்கிக்கொண் டிருந்த ஸ்வர்ணத்தின் மனம், மகனின் பதிலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது. தீபாவளிக்கென்று மகனிடம் கொடுத்தனுப்ப சாவித்திரிக்கு விலையுயர்ந்த புடைவையை எடுத்தாள். பல
வர்ணங்களில் ரவிக்கைத் துண்டுகள் வாங்கிளுள். கட்டு வெற்றிலையும், வாசனைப் பாக்கும், சீப்புப் பழமும், மணக்கும் கதம்பமும் வாங்கிக் கூடையை நிரப்பினுள். 'மனேவியிடம் நல்ல மாதிரி பேச வேண்டும். பரிவாக நடந்து கொள்ள
வேண்டும். 'தஸ், புஸ் ஸென்று உன் கோபத்தைக் காட்டாதே' என்றெல்லாம் புத்திமதிகள் கூறினுள் ஸ்வர்ணம். 'வேட்டகத் தில் பெரியவர்கள் ஏதாவது சொன்னலும் பொறுத்துக்கொள், அப்பா!' என்றுவேறு மகனுக்குச் சொன்னள். ரகுபதி எல்லா வற்றிற்கும். மெளனமாகவே தலையை அசைத்தான்். மைசூர் பிரயாணத்துக்காகப் பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ஸரஸ்வதி, ஸ்வர்ணம் கூறுவதை முழுவதும் கேட்டுவிட்டு, 'எல்லா புத்திமதிகளையும் சொன்னயே அத்தை. முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டாயே' என்ருள்.
"'என்ன?' என்று ஸ்வர்ணம் அவளைத் திருப்பிக் கேட்டதும், அவள், 'எல்லோரிடமும் சரிவர நடந்து கொண்டு திரும்பி வரும்போது சாவித்திரியையும் அழைத்து வந்து விடு என்று சொல்ல வேண்டாமா? என்று கேட்டுவிட்டு பெருமை பொங்கும் முகத்துடன் ரகுபதியைத் திரும்பிப் பார்த்தாள்.
'அதற்குத்தான்் நீ அவனுடன் போய் எல்லாவற்றையும் பொறுமையுடன் நடத்திக்கொண்டு வருவாய் என்றிருந்தேன். திடீரென்று நீதான்் யாத்திரை கிளம்பிவிட்டாயோ!' என்று. நிஷடுரமாகப் பதிலளித்தாள் ஸ்வர்ணம்.
தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே ரகுபதியும். ஸரஸ்வதியும் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். ரெயில் நிலையம் வரையில் இருவரும் ஒன்ருகச் சென்று வெவ்வேறு வண்டிகளில்