இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வே கா π53) 5
பாழாக்கிக்கொள்ள வேண்டுமா? நாலு பேர் எதிரில் நொண்டிப் பெண்ணே, மனைவி என்று அழைத்துச்செல்ல வேண்டுமா? உனக்கும் எனக்கும் என்றும் இந்தச் சகோதர அன்பே நிலைத் திருக்கட்டும், அத்தான்்' என்று பெரிய வேதாந்தியைப்போல் கூறிவிட்டாள் ஸ்ரஸ்வதி. இந்தப் பதிலேக் கேட்டு ரகுபதி ஒன்றும் பேச முடியவில்லே. வாதப் பிரவாதங்களுக்கு இட மில்லாமல் அவள் அளித்த பதில் ரகுபதியின் தாய் ஸ்வர்ணத் தைக்கூடப் பிரமிக்கச் செய்துவிட்டது. அத்துடன் அவர்கள் அந்த யோசஃனயைக் கைவிட்டு விட்டார்கள். ரகுபதிக்கு வேறு இடத்திலிருந்து ஜாதகங்கள் வர ஆரம்பித்தன. இரண்டொரு இடங்களுக்குப் போய்ப் பெண் பார்த்தும் வந்தார்கள். இந்தப் பேட்டிப் படலங்களில் ஒன்றுதான்் அன்று நடைபெறவிருந்தது. அதற்குத்தான்் இத்தனை அமர்க்களமும்.