தங்கத்துக்கு அர்ப்பணம் 123
அகங்காரமும், மமதையும் தலைதுாக்கி நம்மை நசுக்கிவிடுகின்றன. லேசிலே மனம் பணியமாட்டேன் என்கிறது. குழந்தைகள் அப்படி இல்லை. ஒன்று வேண்டுமென்று ஹடம் பிடிப்பார்கள். விம்பு பண்ணுவார்கள். ஆனால், அதையே நீடித்து நினைவு வைத்துகொள்ள மாட்டார்கள். சட்டென்று மறந்து போவார் கள்' என்று கூறிஞர்.
ரகுபதி மனைவியைப் பார்த்து வருவதற்காகத்தான்் கிளம்பி இருக்கிருன். அவளிடம் எப்படியெல்லாம் 'பல்யமாக நடந்து கொள்ளவேண்டும் என்று தாயார் வேறு உபதேசம் செய்து அனுப்பி இருக்கிருள். ஸரஸ்வதி ரெயில் நிலையத்தில் கூட சாவித் திரியை அழைத்து வந்துவிடு' என்று உத்தரவு போட்டிருக்கிருள். ஆனல் அவன் அந்தராத்மா இருக்கிறதே அது லேசில் மசிந்து போகத் தயாராக இல்லை. படுக்கை அறையில், 'உன்னை அடித்துவிட்டேன் என்று கோபமா சாவித்திரி?' என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியபோது, அவள் தன் கைகளே ஆங்காரத்துடன் உதறி விடுவித்துக்கொண்ட சம்பவத்தை அவன் மனம் மறக்கவில்லை. சாதாரண சிருய்ப்புக் காயமாக இருந்தால் சிக்கிரம் குணமாகிவிடும். ஆழப்பதிந்து போன வெட்டுக் காய மாக அல்லவா ஏற்பட்டிருக்கிறது?
புகை வண்டி பெரும் வேகத்தில் போய்க்கொண் டிருந்தது. அதன் வேகத்தைப்போல் ரகுபதியின் மனே வேகமும் அதிக மாயிற்று. டைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் மனைவியை நாடிப் போகிருன்? மறுபடியும் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? சிந்தனை ச் சுழலில் ஜன்னலின் மேல் தலை வைத்துக்கொண்டே கண்ணயர்ந்து விட்டான் ரகுபதி. விடியற்காலை சில்லென்று காற்றுப் பட்ட வுடனேயே விழிப்பு ஏற்பட்டது. ரெயிலும் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு ஒரு நிலையத்தில் நின்றிருந்தது. ஊரின் பெயரை உற்றுக் கவனித்தான்். ஆ! தங்கம் இங்கேதான்ே அருகில் கிராமத்தில் இருக்கிருள்' என்று நினைத்தான்். சாவித்திரி மன்னியோடு எங்கள் ஊருக்கு வாருங்கள்!' என்று அழைத்துவிட்டுப் போனளே! மன்னியும் வேண்டாம். பொன்னி யும் வேண்டாம். நான் மட்டுந்தான்் போகிறேனே. தங்கத் தின் ஊரில் தீபாவளி கிடையாதா என்ன? கூடை நிறைய இருக்கும் கதம்பம் தங்கத்தின் கருங் கூந்தலுக்குத் தான்் அர்ப் பணம் ஆகட்டுமே! பெட்டியிலே வைத்திருக்கும் வாணங்கள்,