பக்கம்:இருளும் ஒளியும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவேற்பு 131

வந்தான்். பாலைக் கறந்துகொண்டே தங்கம் அவனைப் பார்த்து. 'அத்தான்்! கையில் என்னவோ வைத்திருக்கிறீர்களே. அது என்னது? விலை ரொம்ப இருக்குமோ?' என்று கேட்டாள்.

'து பிரமாதம்! அதன் விலே ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய்களுக்கு மேல் போகாது' என்ருன் ரகுபதி.

தங்கம் ஒரு மாதிரியாகச் சிரித்தாள். பிறகு அவனைப் பார்த்து, அத்தான்்! நான் சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நம் பண்னேக் குடியானவன் கிட்டே ஒரு வார்த்தை சொன்னுல் ஒரு கட்டு வேப்பங் குச்சிகளைச் சீவி ஒழுங்குபடுத்தித் தருவான். விலை, கிலே ஒன்றும் நீங்கள் தர வேண்டாம். ஊருக்குப் போகும்போது எடுத்துப் போங்கள்!'" என்ருள்.

ரகுபதி 'கட கட" வென்று சிரித்து விட்டான். அவன் இம்மாதிரி மனம் விட்டுச் சிரித்து எவ்வளவோ காலம் ஆயிற்று. கிணற்றிலிருந்து ஜலம் இழுத்துக் கைகால்களை அலம்பிக் கொண்டே, 'அது போகட்டும். காலையில் எழுந்தவுடன் துளசி மாடத்துக்குக் கோலம் போடுவது. அதன் பிறகு மாட்டிற்குத் தீனி வைத்துப் பால் கறப்பது, அதன் பிறகு?' என்று அவளைக் கேட்டான் ரகுபதி.

'அதன் பிறகு ஏரிக்குப் போய்த் துணிகளைத் துவைத்துக் குளிப்பது' என்று ஒய்யாரமாகப் பதிலளித்தாள் தங்கம்.

'இப்படியே நாள் பூராவும் ஒரு வேலை மாற்றி இன்னென்று என்று செய்துகொண் டிருப்பாயாக்கும்! வேறு பொழுது போக்கு எதுவும் இல்லையா?' என்று மேலும் கேட்டான் ரகுபதி.

தங்கம் அவனுக்கு மறுமொழி கூறுவதற்கு முன்பே உள்ளிருந்து அலமு அவளேக் கூப்பிட்டாள். பால் பாத்திரத்துடன் உள்ளே சென்ற தங்கம், தட்டில் இட்லிகளுடனும், கையில் மணக்கும் காப்பியுடனும் கூடத்துக்கு வந்து. ரகுபதியின் முன்பு அவைகளே வைத்துவிட்டுத் தாழ்வாரத்திலிருந்த துணிகளை முட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டாள். இடுப்பில் குடத்தை ஒய்யாரமாகச் சாய்த்து வைத்துக்கொண்டு, 'ஏரிக்குப் போய்விட்டு வருகிறேன். அத்தான்்! வந்த பிறகு அதற்கு அடுத் தாற்போல் என்ன வேலை என்பதையும் சொல்லுகிறேன்' என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டாள்.

சூரியன் வானத்தில் மேலே வந்து விட்டான். சமையலறை பிலிருந்து கீரைக் குழம்பு 'கம கம' வென்று மணக்க ஆரம்