பக்கம்:இருளும் ஒளியும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இருளும் ஒளியும்

பித்தது. வெறுமனே கூடத்தைச் சுற்றிச் சுற்றி வர ரகுபதிக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, 'வெளியே போய் வரலாம் என்று கிளம்பி, அலமுவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். வழி யெல்லாம் ஒலே வேய்ந்த குடிசைகள். அவைகளை அடுத்து மரகத வண்ணத்தில் வயல் வெளிகள். அவைகளில் படிந்து சல சல. வென்று ஒடும் நீரின் ஒசை. ஈர மண்ணிலிருந்து எழும் ஒருவித வாசனை. வழக்கமாக நகரவாசிகளில் பலர் அத்தர், சந்தணத் தின் மணத்தையே உணர்ந்தவர்கள். சுசு போகத்திலேயே திளேப்பவர்கள். காலில் மண் ஒட்டிக்கொண்டால் முகத்தைச் சுளிப்பவர்கள். இவர்களுக்கு முழங்கால்கள் வரையில் சேற்றில் அழுந்தப் பாடுபடும் ஏழைக் குடியானவர்களைப்பற்றிச் சிந்திப் பதற்கே பொழுது இருப்பதில்லை. ஈர மண்ணிலிருந்து எழும் வாசனையை நுகர்ந்து அநுபவிப்பதற்கும் பாக்கியம் செய்ய ຄ. ຄໍາ öຄ) !

ரகுபதி சிறிது தடுமாற்றத்துடனேயே வரப்புகளின் மீது நடந்து சென்ருன். அங்கே மனத்துக்கு ரம்யமான காட்சி ஒன் றைக் கண்டான். இசையும், கலையும். ஆடலும், பாடலும் நகரங் களில் மட்டும் இல்லை. சேறும், சகதியும், உழைப்பும், பலனும் நிறைந்திருக்கும் கிராமங்களிலும் அவை இருக்கின்றன என்பதை ரகுபதி உணர்ந்துகொண்டான். உடல் கட்டுடன் விளங்கும் இளமங்கை ஒருத்தி வயல்களுக்கு மடை கட்டிக்கொண் டிருந்தாள் சற்று எட்டி, ஏற்றக் கிணற்றிலிருந்து ஒர் ஆடவன் ஏற்றம் இறைத்துக்கொண்டே, -

வண்டி கட்டி மாடு கட்டி - ஏலேலமடி ஏலம்

மீனகதி அம்மை கூண்டு கட்டி - ஏலேலமடி ஏலம்' என்று உர்த்த குரலில் பாட ஆரம்பித்தான்். தண்ணிர் பாய்ச்சிக்கொண் டிருந்த பெண், கணவனை நிமிர்ந்து பார்த் தாள். பிறகு கண்களில் காதல் கனல் வீச அவனைப் பார்த்துக் கொண்டே, 'அட! உனக்குத்தான்் பாடத் தெரியுமோ?" என்கிற பாவனையில் தலையை அசைத்துவிட்டு,

' கூண்டுக்குள்ளே போற பெண்ணே - ஏலேலமடி

ஏலம்

அட கூப்பிட்டாலும் கேட்கலையோ? - ஏலே லமடி

ஏ லம்'

என்று சவால் விடுப்பதுபோல் தீங்குரலில் பாடினுள்.