3: 1
அழைக்காத விருந்தாளி
மைசூர் ராஜ்யத்தில் பார்க்க வேண்டிய இடங்களே அநேக மாகப் பார்த்து முடித்து விட்டாள் ஸரஸ்வதி. கோபாலதாலர் வசித்து வந்த வீடும். அதன் சுற்றுப்புறங்களும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சர்க்கார் அலுவலாக வந்திருந்த அவள் தகப்பனர், தம் வேலைகளை முடித்துக்கொண்டு விட்டார். தன் சகோதரியின் குடும்ப நிலையை இதற்குள் அவர் ஒருவாறு ஸரஸ்வதி சொல்லித் தெரிந்துகொண் டிருந்தார். அவர்களிடம் இனிமேல் ஸரஸ்வதி தங்கியிருக்க இயலுமா என்றும் கவலை அடைந்தார் அவர். ஆகையால் அவர் ஊருக்குப் புறப்படு வதற்கு முன்பு, ஏனம்மா! நீயும் என்ைேடு வந்து விடுகிருயா? வெளி நாடுகளெல்லாம் பார்த்தாற்போல் இருக்கும்' என்று கூப்பிட்டார்.
ஸரஸ்வதி சிறிது நேரம் யோசித்துவி டு, 'தீபாவளிப் பண்டிகைக்கு அத்தான்் வேட்டகம் போயிருக்கிருன். அநேகமாக மனைவியை அழைத்து வந்து விடுவான். அத்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் எப்படியப்பா வந்து விடுவது?' என்று கேட்டாள். அதுவும் வாஸ்தவந்தான்் என்று தோன்றியது அவருக்கு. மகளைப் பிரிந்து செல்லும்போது அன்புடன் அவள் தலையை வருடிக் கொண்டே. 'அம்மா! எல்லாவற்றிலும் நீ புத்திசாலியாக இருக் கிருய். உன்னிடம் ஒரே ஒரு அசட்டுத்தனம் இருக்கிறது. என் குடும்பத்தின் விளக்கே நீ ஒருத்திதான்். இந்த விளக்கால் என் குடும்பம் ஒளிபெறவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இந்த ஒரு விளக்கிலிருந்து பல தீபங்களை ஏற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். உன் மனசுக்குப் பிடித்தவகை யாரைச் சொல்லுகிருயோ அவனை நான் ஏற்பாடு செய்கிறேன், ஸரஸ்வதி!' என்று உருக்கமாகக் கூறினர்.
ஸ்ரஸ்வதியின் பளிங்குக் கன்னங்களில் கண்ணிர் உருண்டு வழிந்தது. ஆர்வத்துடன் தகப்பஞரின் கரங்களைப் பற்றிக் கண் களில் ஒற்றிக்கொண்டாள் ஸரஸ்வதி. பிறகு உதடுகள் உணர்ச்சி யால் துடிக்க, 'அப்பா! நான் என்றுமே இப்படிக் கன்னியாக