பக்கம்:இருளும் ஒளியும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைக்காக விருங்காளி 139

கடிதம் அது. பொழுது விடிந்தால் தீபாவளி. மனைவியின் விட்டிற்குச் செல்லாமல், கிராமத்தில் அத்தான்் என்ன செய் கிருன் என்று ஆச்சரியம் அடைந்தாள் ஸரஸ்வதி. உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்துப் படித்தாள். அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சிறிது முன்பு தகப்பைைரப் பிரிந்ததற்கு வருந்திய ஸரஸ்வதி. இப்பொழுது அத்தான்ின் போக்கைக் கண்டு வருந்தினுள். குழலோசைக் கவிதைப் புஸ்தகத்தை எடுத்து வந்த கோபால தாஸர் ஸரஸ்வதியின் சிவந்த முகத்தைக் கண்டு பயந்து விட்டார். கையில் பிரித்த கடிதத்துடன் உட்கார்ந்திருந்த அவளைப் பார்த்ததும் காவியங் களில் தோன்றும் கண்ணகியும், திரெளபதியும் அவர் அகக்கண் முன்பு காட்சி அளித்தனர்.

' என்னம்மா, விஷயம்?' என்று கேட்டார் அவர்.

'இது ஒரு பெரிய ராமாயணம் மாமா. ஆதியோடு அந்தமாக இதைச் சொல்லி முடியாது. என்னுடைய அத்தான்் இருக்கிருனே அவன் மனைவியுடன் தீபாவளி கொண்டாட வில்லை. இரண்டுங்கெட்டானக யார் வீட்டிலேயோ அழைக்காத விருந்தாளியாகப்போய் உட்கார்ந்திருக்கிருன். மனிதன் வாழ்க் கையில் ஏமாறுவது சகஜந்தான்். அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அவன் ஒழுங்கான பாதையிலிருந்து விலகிச் செல்வது தவறு அல்லவா? மனைவி உதாசீனம் செய்கிருள் என்றால், கணவன் பதிலுக்கு அவளை உதாசீனம் செய்யவேண்டும் என்பது சரியல்ல" என்று கூறிவிட்டுக் கடிதத்தை மறுபடியும் உரக்கப் படித்தாள்:

'அன்புள்ள ஸரஸ்வதிக்கு, ரகுபதி அநேக ஆசீர்வாதம். உன் மைசூர் பிரயானமெல்லாம் முடிந்து எப்பொழுது நீ ஊருக்குத் திரும்பி வரப்போகிருய்? உன்னுடன் ஒன்ருக ரெயிலடி வரையில் வந்த நான் என் தீர்மானத்தைத் தகர்த்தெறிந்து விட்டேன். மதிக்காத மனைவியைத் தேடிப் போவதைவிட, மதித்து என்னைத் தன் ஊருக்கு வரும்படி அழைத்த தங்கத்தின் வீட்டில் இப்பொழுது நான் இருக்கிறேன். நாளேப் பொழுது விடிந்தால் தீபாவளி. தீபாவளியும் இங்கேதான்். அத்தை அலமு உனக்காக ரொம்பவும் பயப்படுகிருள். "நீ இங்கே பிருப்பது தெரிந்தால் அந்தப் பெண் ஸரஸ்வதி என்னேப் பொசுக்கி விடுவாள்' என்று அடிக்கடி சொல்கிருள்.