140 இருளும் ஒளியும்
தங்கம் வரல- அக்கா' வை மறக்கவில்லே. உன்னிடம் கற்றுக்கொண்ட சின்னஞ் சிறு விளியே- கண்னம்மா'வை த் தினம் பாடுகிருள். அந்தப் பெண்ணுக்குத்தான்் என்ன சாரீரம் என்கிருய், ஸ்ரஸ் இறைவன் சிலருக்குத்தான்் இந்த பாக்கி
யத்தை அளிக்கிருன் போலும். தங்கத்துக்கு நிஜமாகவே பூட்டிக் கொள்ள உடம்பில் தங்க நகைக. இல்லையே தவிர,
அவள் பசும் பொன் என்பதில் சந்தேகம் இல்லே.
மது நிறைந்திருக்கும் மலர்களைத்தான்் வண்டு தேடிக் கொண்டு போகும். மதுவில்லாததும், வாசனை இல்லாததுமான மலர் இங்கே யாருக்கு வேண்டும்?'
ஸ்ரஸ்வதியின் கண்கள் கோபத்தால் சிவந்தன: "அழகாக இருக்கிறது தங்கத்தைப்பற்றிய வர்ணனை: பாவம், பேதைப் பெண்!' என்ருள் ஸரஸ்வதி.
செந்தமிழை நன்ருகப் புரிந்துகொள்ள முடியாத கோபால தாஸர் கவலையுடன், என்னம்மா இதெல்லாம்? ஊரிலே எல்லோரும் செளக்கியந்தான்ே?' என்று விசாரித்தார்.
'சீக்கிரத்தில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன். மாமா! கொஞ்சம் என் அத்தான்ுக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டிருக் கிறது. அதைப்போய்த் தெளிய வைக்க வேண்டும்' என்ருள் ஸ்ரஸ்வதி. அந்த அதிசயப் பெண்ணைப் பார்த்துக் கோபால தாளர் மனத்துக்குள் வியந்தார்.