பக்கம்:இருளும் ஒளியும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

நீச மனுேபாவம்

கங்கா ஸ்நானம் செய்துவிட்டுப் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்தாள். தங்கம். மத்தாப்பின் சிவப்பு ஒளி அவள் சிவந்த கன்னங்களை மேலும் சிவப்பாகக் காட்டியது: மாங் காய்க்கரை போட்டு ரோஜா வர்ணத்தில் சாதாரண நூல் புடைவையை உடுத்தியிருந்தாள் அவள். ரகுபதிக்கு அப் பொழுது இருந்த தாராளத்தில், சாவித்திரிக்காக அவன் வாங்கி வந்திருந்த விலையுயர்ந்த பட்டுப் புடைலை யைக் கூடத் தங்கத்திடம் எடுத்துக்கொடுத்துவிட் டிருப்பான். ஊரிலே அம்மாவுக்குப் பதில் சொல்வியாக வேண்டும். அந்தப் பகட்டான சேலையைப் பார்த்தாலே தங்கம் பயந்துபோவாள்! ஒரு தடவை அதைப் பெட்டியிலிருந்து அவன் வெளியே எடுத்துக் காண்பித்தபோதே தங்கம். அப்பா!' என்று கண்களைப் பொத்திக் கொண்டாள். அப்படியே கண்ணப் பறிக்கிறதே. இது!’ என்று வேறு சொன்னாள். எல்லோர் வீட்டிலும் கங்கா ஸ்நானம் நடக்கிறது என்பதற்கு அடையாளமாக, கிணற்றிலிருந்து இலம் இழுக்கும்போது ராட்டினங்கள் ங்ொய், நொய்' என்று சத்தமிட்டன. ஒவ்வொருவர் வீட்டுப் புறக்கடையிலிருந்தும் வெந்நீர் அடுப்புப் புகை சுருள் சுருளாக எழுந்தது. குதித்துக் கொம்மாளம் போட்டுக்கொண்டு குழந்தைகள் பட்டாசு சுட்ட னர். தலே தீபாவளி நடக்கும் வீடுகளிலெல்லாம் நாதஸ்வரத் தின் இன்னெலி பரவி இருந்தது. ரகுபதி தெருவிலே நின்று கொண்டு இந்தக் காட்சிகளைப் பார்ப்பதில் ஈடுபட் டிருந்தான்்.

அவன் அருகில் நின்றிருந்த தங்கம் மத்தாப்பு கொளுத்து வதைத் திடீரென்று நிதுத்திவிட்டுத் எதிர் வீட்டுக்கு ஒடினள். சிறிது நேரத்துக்கெல்லாம் கையில் செவேல் என்று காணும் ஆரத்தி நீரைக் கொண்டுவந்து தெருக்கோலத்தில் ஊற்றிவிட்டு மறுபடியும் உள்ளே போனள். மறுபடியும் வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் வெளியே வந்தாள். ரகுபதி சிறிது நேரம் அவளையே உற்றுப் பார்த்தான்். பிறகு, ' என்ன? காலையில் வரும்படி பிரமாதமாக இருக்கிறது?' என்று கேட்டான்.