கி. மே னுபாவம் 143.
ஸ்ட்ராங் காப்பிக்காகவும் காதங்கடந்து அவன் வந்திருக்க
வேண்டியதில்லை. மனைவியின் மெல்லிய கரங்களைப் பற்றித் தன்
கைகளுக்குள் சேர்த்துக்கொள் கிருன்.
ரகுபதிக்கு மேலும் தான்் அங்கே நிற்பது அசம்பாவிதம்
என்று தோன்றியது. அறைக்குள் சென்று உட்கார்ந்து விட்டான். லேசாகத் திறந்திருந்த கதவை நன்ருகத் திறந்து கொண்டு தங்கம் பலகாரத் தட்டுடன் உள்ளே வந்தாள். தட்டைத் தான்கவே மேஜை மீது வைத்தாள். பிறகு, காப்பி கொண்டு வருகிறேன்' என்று வெளியே புறப்பட்டாள். ரகுபதி எழுந்தான்். இரண்டடி முன்னே சென்ருன். தங்கத்தின்
புடைவை மேலாப்பு காற்றில் பின்புறம் பறந்துகொண் டி ருந்தது. அதைத் தொட்டுவிட்டான். ஆனால், எங்கிருந்தோ ஒரு குரல் கண்டிப்பாக அவனை எச்சரித்தது! மெல்லிய காற்றில் காலையில் ஏரிக்கரையிலிருந்து வந்த குரல் அது.
'லோக நாயகனகிய பூரீராமன், ஏகபத்தினி விரதத்தை அனுஷ்டிப்பவன், சதா சீதையை நினைத்து அவளிடம் மனத்தைச் செலுத்துபவன் சொன்ன சொல்லைக் கடவாதவன்! சத்தியசந்தன். இப்படிப்பட்ட பூரீராமனே நான் வணங்குகிறேன்' என்று பொருள் செறிந்த கவிதை ஒன்றைப் பாடிக்கொண்டே வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் வீதி வழியே வந்துகொண் டிருந்தார்.
தங்கம் காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வரவில்லை. பாடிக்கொண்டு செல்லும் அந்தணருக்குப் பிகை அளித்து விட்டுக் கீழே விழுந்து அவர் பாதங்களில் நமஸ்கரித்தாள்.
ரகுபதி இடியால் தாக்குண்டவன்போல் அயர்ந்துபோய், கவிதையை நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டான்: அவன் செய்கை அவனுக்கே வெறுப்பை அளித்தது. சீ, சீ! என்ன நீச மனோபாவம்? மனிதன் வாழ்க்கையில் ஏமாற்றமடைந்து விட்டால்தான்் என்ன? இப்படியா என் புத்தி பேதலிக்க வேண் டும்?' என்று வருந்தினுன் அவன்.
அத்தை அலமு காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். 'ஏண்டா அப்பா! தீபாவளிக்குப் போகாமல் இங். கேயே தங்கிவிட்டாயே. உன் அம்மாவுக்குத் தெரிந்தால் வீண் மனஸ்தாபம் ஏற்படுமே. ஸரஸ்வதி என்னை வெறுமனே விட மாட்டாளே, அப்பா!' என்ருள் அவள்.
ரகுபதி அவளுக்கு மறுமொழி கூருமல் காப்பியை அருந்தி. விட்டு வெளியே போய் விட்டான்.