பக்கம்:இருளும் ஒளியும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

என்னுடைய குற்றம்

தலைத் தீபாவளிக்கு மாப்பிள்ளை வரவில்லை என்கிற ஒரு காரணமே மங்களத்தை மறுபடியும் படுக்கையில் தள்ளி விட்டது எனலாம். எந்த அழைப்பை வைத்துக்கொண்டு மாப்பிள்ளை வருவான் என்று எதிர்பார்த்திருந்தாளோ, அந்த அழைப்பை அவன் லட்சியம் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் மங்களம். இரு குடும்பங்களுக்கும் செளஜன்ய பாவம் நிறைந் திருந்தால் ஒரு வேளை மாப்பிள்ளை அழைக்காமலேயே வந்திருப் பான். ஒர் இடத்தில் பிரியமும், மதிப்பும் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் செய்யும் பெரிய குற்றங்களைக்கூட மறந்து விடுகிருேம். அவர்கள் நம்மை வா’ என்று கூப்பிடாததற்கு முன்பே, நாமாகவே வலுவில் அங்கு போகிருேம். அவர்கள் முகங் கொடுத்துப் பேசாமல் இருந்தாலும் பாராட்டாமல் வந்து விடுகிருேம். "அவர்கள் சுபாவம் அப்படி" என்று நம் மனத்துக்கே நாம் தேறுதல் கூறிக்கொள்கிருேம். பிடிக்காத இடமாக இருந்தாலோ, ஒவ்வொரு விஷயத்தையும் தவருக எடுத்துக்கொண்டு பிரமாதப்படுத்துவது மனித சுபாவம்.

சாதாரண சமயமாக இருந்தால் சந்துரு எழுதிய கடிதமே ரகுபதி வருவதற்குப் போதுமானது. ராஜமையர் வேறு எழுத வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சாவித்திரி தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே கணவனுக்கு அன்புக் கட்டளை இட்டிருந்தால் வேறு ஒருத்தருமே கடிதம் போட்டிருக்க வேண்டாம்! ரகுபதி ஒடோடியும் வந்திருப்பான். நிலைமை மாறி இருக்கும்போது இவ்வளவு சரளமான சுபாவத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

விட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும். வாதப் பிரதி வாதங்களுமாகச் சேர்ந்து மங்களத்தின் மனத்தை வெகுவாகக் கெடுத்துவிட்டன. சிறு வயதிலிருந்து மரியாதை செலுத்தி வந்த தன் மாமியாரிடம் மங்களத்தின் மனம் கசந்தது. மனஸ்தாபம் முற்றி விடுவதற்கு முன்பே ராஜமையர் தாயாரைத் தம் சகோதரியிடம் அலுப்பிவைத்தார். குடும்பத்துச் செய்திகள் ஒன்றுக்குப் பத்தாக ஊரில் பரவுவதை அவர் விரும்பவில்லை.