150 இருளும் ஒளியும்
அப்படி லோகமாதாவின் அன்பிலே கோபம் பொங்கி வழிகிறது. அதர்மத்தைப் பொறுக்கமாட்டேன்' என்று கர்ஜித்து கோரருப மெடுத்து அதைச் செயலிலும் காட்டி இருக்கிருள் ஈஸ்வரி.
சந்நிதியின் முன்பு கூப்பிய கரங்களுடன் ஸரஸ்வதி நின்றிருந்தாள். கண்களிலிருந்து அருவிபோல் நீர்பெருக, "ஜய சங்கீத ரளிகே!' என்கிற சியாமளா தண்டக ஸ்லோகத்தில் ஒரு வரியைத் திருப்பித் திருப்பி வாய்க்குள் பாடிக்கொண்டாள் அவள்.
'உன்ன்த லட்சியங்களுக்கு இருப்பிடமாகவும், மனத் துய்மையுடனும், உன்னிடம் மாருத பக்தியைச் செலுத்துபவ ளாகவும் என்னே வைத்திரு, தாயே!' என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்தாள் ஸரஸ்வதி.
கோவிலைவிட்டுக் கீழிறங்கி பூரீரங்கப் பட்டனத்தை அடைவதற்குள் ஸரஸ்வதியின் மனம் துாய்மை பெற்றுவிட்டது எனலாம். சில நாட்களாகவே அவள் உள்ளம் சந்துருவை அடிக்கடி நினைக்க ஆரம்பித்திருந்தது. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், இடையில் தன் உறுதி தளர்ந்து போவதை அவள் விரும்பவில்லை. சந்துருவைத் தான்் மணந்துதான்் ஆக வேண்டும் என்கிற அவசியமும் ஒன்றும் இல்லை. அந்த உறுதி வலுப்பெற பூரீ சாமுண்டீச்வரி அவளுக்கு அருள் புரிந்தாள். சமீபத்தில் விவாக பந்தத்தில் சிக்கவேண்டாம் என்றும் தீர் மானித்துக்கொண்டாள் ஸரஸ்வதி:
அதற்கு அதுசரணையாகக் கோபாலதாஸ்ர் வழி நெடுக ஸரஸ்வதியைப் பார்த்து, 'திருச்செந்துார் பார்த்திருக்கிருயா? பழனிக்குப் போய் இருக்கிருயா? மதுரையில் மீளுகதியை வணங்கி இருக்கிருயா? கண்ணனின் வேய்ங்குழல் நாதத்தால் புனித மாக்கப்பட்ட பிருந்தாவனம், வட மதுரைக்குப் போய்ப் பாரம்மா. கோகுலத்தில் அவன் திவ்யரூபத்தை நீ வணங்க வேண்டும். பக்தை மீராவின் பாடல்களைக் கேட்க வேண்டும். " தாஸ் மீராலால கிரிதர னின் புகழைக் கேட்க வேண்டும். உலகம் உன்னுடைய அத்தையையும், அத்தான்ையும், சாவித் திரியையும் மட்டும் கொண்டதல்ல. உலகம் பரந்தது. அதில் எல்லோரும் உன் நண்பர்கள், உறவினர்கள் என்கிற மனப் பான்மையை நீ வளர்க்கவேண்டும். எப்பொழுதாவது இல்லறத்தில் நீ ஈடுபட்டாலும் ஆண்டவனிடம் பக்தி செலுத்து வதை மட்டும் மறக்காதே. இறைவனின் திவ்ய ரூபத்தை உன்