பக்கம்:இருளும் ஒளியும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்க் கனே 151

மனசில் பிரதிஷ்டை செய்துகொள் அம்மா உனக்கு ஒரு குறைவும் வராது!' என்று பல விஷயங்களைக் கூறி ஆசிர் வதித்தார்.

ரெயில் நிலையத்துக்கு வழி அனுப்ப வந்திருந்தார் கோபால தாஸர். வீட்டைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பே ஸரஸ்வ. அவரை வணங்கினுள். 'மாமா! எனக்குத் தெரியாத பல விஷயங்களைத் தெரிய வைத் தீர்கள். என் அத்தான்ையும், சாவித்திரியையும் ஒன்று சேர்த்த பிறகு அத்தையுடன் நான் வட நாட்டுக்குப் புறப்படுகிறேன். ஒன்று சேர்ந்த தம்பதிகளிட மிருந்து சில நாட்கள் நாங்கள் பிரிந்துதான்் இருக்க வேண்டும். கட்டாயம் பக்தை மீரா வசித்த புனித ஸ்தலத்துக்குப் போகிறேன். அவள் அழகிய பாடல்களைக் கற்றுக்கொள்கிறேன். துளசிதாஸரின் அருமையான ராமாயனக் கவிதைகளைப் படிக் கிறேன். வங்கத்துக்குச் சென்று மகாகவி தாகூரின் உபதேசங் களேக் கேட்கிறேன். ராஜகட்டத்துக்குப் போப் அண்ணல் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். என்னே ஆசீர் வதித்து அனுப்புங்கள்!' என்று அவரை வேண்டிக்கொண்டாள்.